Monday, 27 October 2014

கோவிந்தபுரம், ஸ்ரீ ருக்மிணி தேவி சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோவில்

                   
                             வகரதுண்ட  மஹாகாய   சூர்யகோடி சமப்ரப
                      
                          அவிக்னம்  குருமேதேவ   சர்வகார்யேஷு  சர்வதா!!



                          17.     கோவிந்தபுரம்:-
              மூலவர்:-  ஸ்ரீ பாண்டுரங்கன், (ஸ்ரீ விட்டல்)
                       தாயார்:-  ஸ்ரீ ருக்மிணி தேவி.   
ஸ்ரீ ருக்மிணி சமேத ஸ்ரீ பாண்டுரங்கன்
                     2010 ம் வருடம்  ஜனவரிமாதம்  நாங்கள் கோவிந்தபுரம் சென்றிருந்தபோது,ஸ்ரீ விட்டல்தாஸ் அவர்கள்    நடத்திய  பாடசாலையையும், கோசாலையையும் கண்டோம்.ஸ்ரீ பாண்டுரங்கனையும் ஸ்ரீ ருக்மிணியையும் ஸ்ரீ விட்டல்தாஸ் அவர்களின் குடிலிலேயே தரிசனம் செய்து நமஸ்கரித்தோம்.ஸ்ரீ விட்டலன்   நாமத்தையும்  அங்கிருந்த நேரத்தில் எழுதி சமர்ப்பித்தோம். ஸ்ரீ பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகும் அங்கு சென்றோம்.அந்த இடத்தில் ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலை முழுவதுமாக பார்க்கும்போதே மனமெல்லாம் நிறைந்து,மிகுந்த பிரமிப்புடன் பரவசமாக இருந்தது!!!! என்ன ஒரு அழகு,கம்பீரம்!!

                 
                ஸ்ரீ விட்டல்,ஸ்ரீ ருக்மிணி சிலைகள் பண்டரிபுரத்தில் செய்யப்பட்டு,ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அவர்களால் பண்டரிபுரத்தில் ஸ்ரீ பாண்டுரங்கன் சன்னதியிலேயே சில காலம் வைக்கப்பட்டு,பிறகே கோவிந்தபுரம் கொண்டுவரப்பட்டன.ஸ்ரீ பாண்டுரங்கன் சன்னதி உள்ள மண்டபத்தின்கீழ் தனி அறையில்,பக்தர்களால் எழுதப்பட்ட 100கோடி  ஸ்ரீ விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாக  சொன்னார்கள்.அந்த அறையை சுற்றிவரவும் வ்சதிகள் உள்ளதாம்.
கோவிலின் முன் புற தோற்றம்
               கீழேயிருந்து கோவிலை அடைய 27 படிகள் உள்ளன.27படிகளும் 27 நட்சத்திரங்களை குறிப்பனவாகும்.வயதானவர்கள ஏற வசதியாக இருபுறமும் இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. லிப்ட் வசதியும் இருப்பதாக கூறினார்கள்.   கோவிலின் நுழைவு வாயிலில் துவாரபாலகர்கள் போல இரு பாண்டுரங்க பக்தர் சிலைகளை கையில் தம்புராவுடன் அமைத்துள்ளார்கள்.கோவில், பிரவேசதுவார், மகாதுவார், வசந்தமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கர்ப்பக்கிரகம் என 6 பகுதிகளாக அழைக்கப்படுகிறது.இந்த கோவிலை தட்சிணபண்டரிபுரம் என குறிப்பிடுகின்றனர்.இக்கோவில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.தரை முழுவதும் கிரானைட் கற்களால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.வசந்தமண்டபம் சுமார் 6000 சதுர அடி பரப்புள்ளதாகும்.இதன் மேல்தளம்  fibre கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.இக்கோவில் தூண்களே இல்லாதவகையில் அமைக்கப்பட்டுள்ளது.வசந்தமண்டபத்தை அடுத்துள்ள மகாமண்டபத்தின் மேல் பகுதியில் ஸ்ரீ பாண்டுரங்க பக்தர்களின் சிலைகள் உள்ளன.அருகிலேயே பகவானின் பள்ளியறை உள்ளது.அதற்கு அடுத்து உள்ள அர்த்தமண்டபத்தில் ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள்,ஸ்ரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகள்,ஸ்ரீ கிரிஷ்ணப்ரேமி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன ஸ்ரீ ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகளும்,ஸ்ரீ விட்டல்தாஸ் அவர்களும் திருக்கோவிலூர் ஸ்ரீஞானானந்த ஸ்வாமிகளின் சீடர்களாவர்.ஸ்ரீ ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வந்தவாசி அருகில் தென்னாங்கூரில் ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு  ஒரு கோவில் அமைத்துள்ளார்கள்.அதைப்போன்றே கும்பகோணத்தில் கோவிந்தபுரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.சென்னை அருகே விட்டலாபுரம் என்ற ஊரிலும் ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு ஒரு புராதனமான கோவில்உள்ளது. கோவிந்தபுரம் கோவிலில் அமைந்துள்ள இந்த மண்டபங்களில் 5000 பேர் அமர்ந்து வழிபாடு செய்யலாம்.அர்த்தமண்டபத்தை அடுத்து ஸ்ரீ ருக்மிணி சமேத ஸ்ரீ பாண்டுரங்கனின் கர்ப்பக்கிரகம் அமைந்துள்ளது.
கோவிலின் முழுத்தோற்றம்
                    ஸ்ரீ பாண்டுரங்கனின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம்.ஸ்ரீருக்மிணியுடன்தன்னைசரணடைந்தபக்தர்களுக்குசம்சார சாகரம்இவ்வளவுதான்என்றுகாட்டஇடுப்பிலகைகளைவைத்துக்கொண்டு
நமக்குதரிசனம்தரகாத்துக்கொண்டுஇருப்பவர்ஸ்ரீபாண்டுரங்கன்கால்களில்சலங்கையுடன்,வைஜயந்திமாலையுடன்பீதாம்பரத்துடன்மகரகுண்டலங்களுடன்நெற்றியில்கோபிசந்தனத்துடன்,துளசிமாலையுடன்அருகில்ஸ்ரீருக்மிணியுடன்,சர்வஅலங்காரங்களுடன்ஸ்ரீபாண்டுரங்கனைதரிசித்தோம்.இங்குஒருவிசேஷம்என்னவென்றாலநாம்ஸ்ரீருக்மிணி,ஸ்ரீபாண்டுரங்கனின்பாதங்களைநம் கரங்களால்ஸ்பரிசித்துகண்களில்ஒற்றிகொள்ளலாம்!
நமஸ்காரம்செய்யலாம்
                      
           புண்டரீகன் என்பவர்,தன் பெற்றோரை கவனிக்காமல் கேளிக்கைகளில்ஈடுபட்டாராம்.தன்செல்வமனைத்தும்சென்றபிற்குமனம்வருந்தி,திருந்தி,தன்மனைவி,பெற்றோருடன்காசிக்குசெல்ல,திண்டிரவனம்எனும்ஊரில்ஒருமுனிவரிடம்வழிகேட்டாராம்.அந்தமுனிவரோபெற்றவர்களைகவனித்து,நன்குபராமரித்தாலேகாசிக்குசென்றபலன்கிடைக்கும்எனஅறிவுரை சொன்னாராம்.அன்றிலிருந்துபுணடரீகன்தன்னைபெற்றவர்களைமிகவும் அக்கறையுடன்அவ்வூரில்இருந்தபீமாஎன்னும்நதிக்கரையில்ஒருகுடில்அமைத்துகவனித்துக்கொண்டாராம்.இதையறிந்தஸ்ரீகிருஷ்ணர்புண்டரீகனை சோதிக்கஎண்ணிஅவர்குடிலுக்குவந்தபோது,பெற்றவர்களின்கால்களை
அமுக்கிபணிவிடைசெய்துகொண்டிருந்தபுண்டரீகன்,வந்திருப்பது ஸ்ரீகிருஷ்ணர்எனஅறிந்தும்,ஒருசெங்கல்லைவைத்து,அதன்மேல்நின்று அவரை,தன்பணிவிடைமுடியும்வரைகாத்திருக்கசெய்தாராம்.இந்திரன்தன் சாபம்தீரசெங்கல்லாகக்கிடந்தாராம்.அதன்மேல்பகவானும்இடுப்பில் தன்இருகைகளையும்வைத்துக்கொண்டுநின்றாராம்தன்பணியினை முடித்துவிட்டு,நின்றுகொண்டுஇருந்தஸ்ரீகிருஷ்ணரைபுண்டரீகன்வணங்கினார்.புண்டரீகன்தன்பெற்றோருக்குசெய்யும்பணிவிடைகளால் மகிழ்ந்த
பகவான்,அவருக்குஎன்னவரம்வேண்டும்என்கேட்க,புண்டரீகன்,பகவானைஅவர்நின்றகோலத்திலேயே,அவ்விடத்திலேயேபக்தர்களுக்குகாட்சி அளிக்கவேண்டும்எனவேண்டினாராம்.பகவான்நின்றபீடம்யோகபீடம்என அழைக்கப்படுகிறது.பகவான்அவரதுவேண்டுகோளைஏற்றுபீமாநதியை புண்டரீகனின்பெற்றோர்கள்வசதிக்காகசந்திரபாகாவாகவளைத்து அங்கேயே ஸ்ரீருக்மிணியுடன்கோவில்கொண்டாராம்.அதுமுதல்அந்தக்ஷேத்ரம் புண்டரீகவனம்எனஅழைக்கப்பெற்று,கால்ப்போக்கில்மருவிபண்டரிபுரம்
ஆனது.பகவானும் ஸ்ரீ பாண்டுரங்கன் என அழைக்கப்பெற்றார்.
       ஸ்ரீபாண்டுரங்கன்தன் பக்தர்களிடம் ஒருநண்பனாக,சேவகனாக,ம்ற்றும்பலவிதங்களில்நடத்தியலீலைகள்
அற்புதம்தென்னகத்தில்ஸ்ரீசிவபெருமான்மீதுஅடியார்கள்தேவாரம்,திருவாசகம்போன்றவற்றைபாடியதுபோல்,ஸ்ரீபாண்டுரங்கன்மீதுஅவனதுபக்தர்களஸ்ரீநாமதேவர்,ஸ்ரீஜெயதேவர்,ஸ்ரீதுக்காராம்,ஸ்ரீஜனாபாய்,ஸ்ரீசக்குபாய்போன்றவர்கள்,அபங்கங்கள்அஷ்டபதி,நாமாவளிபோன்றவற்றைபாடியுள்ளார்கள்.ஸ்ரீபாண்டுரங்கனைதரிசித்துவிட்டுபடியிறங்கிவந்ததும்கீழேகோவிலின்அலுவலகம்உள்ளது.அங்குநமக்குதேவையானபாண்டுரங்கனின்படங்கள்,துளசிம்ணிமாலைகள்கிடைக்கின்றன.ஸ்ரீபாண்டுரங்கனுக்குபாதசமர்ப்பணமாகநம்மால்முடிந்ததைசமர்ப்பிக்கலாம்.அங்கிருந்துஇன்னும்கொஞ்சதூரம்சென்றால்,மிகவும்அற்புதமாக,ஆச்சரரியப்படத்தக்கவிதத்தில்கோசாலைஅமைந்துள்ளது!!     
                                      
               இந்த ஆலயம் சுமார் 15ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. அதில் பசுக்களை பராமரிப்பதற்காகவே அதிகமான பரப்பளவு உபயோகப்படுகிறது.தினமும் கோபூஜைநடத்தப்படுகின்றது         
          இங்குள்ளபசுக்கள்எண்ணிக்கையில்சுமார்400இருக்கும்.பசுக்களுக்குசுத்தமானதண்ணீர்வசதி,மின்விசிறிகள்,அவைகளைபராமரிக்க,வெளியில்காற்றோட்டமாகஅவைகளைஅழைத்துச்செல்ல,தனித்தனிஆட்கள்இருக்கிறார்கள்.அவைகளுக்குஉணவாகும்புற்களும்நல்லமுறையில்பயிர்செய்யப்படுகின்றனஒவ்வொருபசுமாடும்நன்றாகபுஷ்டியாகநீண்டகாதுகளுடன்இருக்கின்றன.   அவையனைத்தும்துவாரகை,மதுரா,பிருந்தாவன்ஆகியஇடங்களிலிருந்துவரவழைக்கப்பட்டதாககூறுகிறார்கள்.பசுக்களையும்,கன்றுகளையும்பார்த்தாலேநாம்கோகுலத்தில்இருப்பதைப்போன்றபரவசம்உண்டாகிறதுபசுக்களைகவனிக்கமருத்துவர்களும்உள்ளனர்.5ஏக்கர்பரப்பளவில்பசுக்களுக்குதேவையானவற்றைபயிரிடுகிறார்கள்.பசுக்களின்சாணத்திலிருந்துகோவிலுக்குதேவையானமின்சாரமும்தயாரிக்கிறார்கள்.கோசாலையின்பால்உள்ளுர்மக்களுக்கும்கோவிலுக்கும்மட்டுமேசெலவழிக்கப்படுகிறது.வெளியில்விற்கப்படுவதில்லை.
தஞ்சையில்பலஆதீனங்கள்ஆன்மீகப்பணிகள்ஆற்றுகின்றன.இவற்றுக்கிடையில்இந்ததக்ஷிணபண்டரீபுரம்மிகவும்அழகாக,பலநற்காரியங்களையும்செய்துவருகின்றது.ஆண்டுதோறும்மாணவர்களுக்குநோட்டுபுத்தகங்கள்,
உடைகள்அளிக்கப்படுகின்றன.அங்குள்ள மக்கள்தாமாகவேமுன்வ்ந்து தம் நிலங்களைகோவிலுக்குஅளித்ததாககூறுகின்றனர்.வேதபாடசாலையும்
உள்ளது.

    ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ்மஹராஜ்அவர்கள்தன் பஜனைகள், கதாகாலக்ஷேபங்கள் மூலமாக வரும் வருமானம் அனைத்தையும் இக்கோவிலுக்கே அர்ப்பணிக்கிறார் என்றால் மிகையாகாது.மிகுந்த மனநிறைவுடன் ஸ்ரீ பாண்டுரங்கனையும், கோசாலையையும் தரிசித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம்.                         


           .
ஸ்ரீ பான்டுரங்க பக்தர்கள்
நுழைவு வாயிலில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்க பக்தர் சிலைகள்












              





.
                
            









      

      

        
  ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணஹரி!!ஜெய் ஸ்ரீ வாசுதேவ ஹரி!!ஜெய் ஜெய் விட்டல!! 
                
                                          

ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ்
கோசாலையின் உட்புறம்
       கோசாலையின் உள் அலங்காரம்