Tuesday, 26 August 2014

கீழ்ப்பெரும் பள்ளம் & திருவெண்காடு





                                      வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப
                                     
                              நிர்விக்னம் குருமேதேவ சர்வகார்யேஷு சர்வதா!!


3. கீழ்ப்பெரும் பள்ளம் :-

      ஈஸ்வரன் பெயர் :-     ஸ்ரீ நாகநாத ஸ்வாமி

     அம்பாள் பெயர்       :-   ஸ்ரீ  சௌந்தரநாயகி  











  
இந்த ஸ்தலம் நவக்கிரகங்களில் கேதுவுக்கு உரியது.  கொள்ளூ தானியம், கேதுவுக்கு விசேஷம்.
நெய் விளக்கு ஏற்றிவிட்டு, தொட்டில்  வாங்கி கட்டிவிட்டு, கேதுவுக்கு  பல  நிறங்களுடைய வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்தோம்.  பின்னர் அங்கிருந்து  கிளம்பி திருவெண்காடு  சென்றோம். மிகவும் பிரசித்தி பெற்ற புதன் ஸ்தலம்.


4. திருவெண்காடு  :-

      ஈஸ்வரன் பெயர்:-  ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர்.

     அம்பாள் பெயர்:- ஸ்ரீ பிரம்ம வித்யாமபிகை.

ஸ்ரீ பிரும்மவித்யாம்பிகை
ஸ்ரீஅகோரமூர்த்தி





      இங்கு சிவ மூர்த்திகள் மூன்று.ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர், ஸ்ரீ நடராஜர்,  ஸ்ரீ அகோரமூர்த்தி.
              இங்கு தீர்த்தங்கள் மூன்று,தல விருக்ஷங்கள்  மூன்று. இங்கு புதனுக்கு தனி ஆலயம்  உள்ளது இது ஆதி சிதம்பரம்  எனவும் அழைக்க்ப்பெறுகிறது. இங்கு ஆல மரத்தடியில்  ஸ்ரீ ருத்ர  பாதம் உள்ளது. அதனால்  முன்னோர்களுக்கு  இங்கு தர்ப்பணம் கொடுத்தால்  27 தலைமுறைகளுக்கு நன்மை  தரும்  எனபது  செவிவழி செய்தியாகும் .ஸ்ரீ  அகோரமூர்த்திக்கு, ஞர்யிறன்று  இரவு  அபிஷேகம் செய்பவர்கள் வேண்டுவன எல்லாம் கிடைக்கும் என்கின்றனர். அம்பாள், பிரம்மனுக்கு வித்தையை  கற்பித்ததால்  பிரம்ம  வித்யாம்பிகை  என்று பெயர்.  மிகவும் பெரியகோவில்.பிறகு அங்கு மூலவருக்கும்,புதன் பகவானுக்கும் அர்ச்சனை செய்து பக்ச்சைப்பயறு தானியத்தில் நெய்விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொண்டு பூம்புகார் சென்றோம்.


       அங்கு அரசு அருங்காட்சியகம்   பார்த்துவிட்டு, கடற்கரையை  அடைந்தோம்.  ஐம்பெரும்  காப்பியங்களுள்  ஒன்றான சிலப்பதிகாரம்  ப்ற்றிய நினைவுகள் மனதில் எழுந்தன. கீழே காண்பது பூம்புகாரில் உள்ள் அரசு அருங்காட்சியகம்







                                                                                

திருக்கடையூர், ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்






                வக்ரதுண்ட மஹாகாய ஸூரிய  கோடி  சமப்ரப
               அவிக்னம் குரு மேதேவ சர்வ கார்யேஷு சர்வதா !!!

2. திருக்கடையூர்:-

         ஈஸ்வரன் பெயர் :-  ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் 
   அம்பாள் பெயர் :-      ஸ்ரீ அபிராமி அம்மன் 
   உற்சவர் பெயர் :-    ஸ்ரீ காலஸம்ஹாரமூர்த்தி
   அம்பாள் பெயர் :-      ஸ்ரீ பாலாம்பாள்


            


       
  

    

       இங்கு  24   மணி    நேரமும்     மேளவாத்தியங்களும்     நாதஸ்வரங்களூம் ஒலித்துக்கொண்டேயிருக்கும். மிகவும் விசேஷமான ஸ்தலம். 60-ம் கல்யாணம் (சஷ்டியப்த பூர்த்தி) சதாபிஷேகம் என்று தினமும் கல்யாணம், கோவிலில் நுழையும்போது மேளதாளம்தான்,
     பாற்கடலில்  கிடைத்த   அமிர்தத்தை  கலசத்துடன்  விநாயகர்   திருடிவந்ததால்,  அவருக்கு கள்ளவாரணப்பிள்ளையார்  என்று    பெயர்.  அமிர்தம்    கிடைத்த   குடமே லிங்கமாக மாறியதால்,ஈஸ்வரனுக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயர். இங்கு  
மார்க்கண்டேயரை துரத்திய யமனை  ஈஸ்வரன் காலால் எட்டி உதைத்து  சம்ஹாரம்  பண்ணியதால் உற்சவருக்கு  கால சம்ஹார மூர்த்தி   என்று பெயர். இங்கு விநாயகரை தரிசித்தபின் முல்லை வனநாதரை தரிசிக்க வேண்டும். பின்னர் ர்ஸ்வரனை தரிசிக்கவேண்டும். இங்கு நவக்கிரகம் கிடையாது.

ஸ்ரீஅபிராமி அம்மனுக்கு தனி சன்னதி உண்டு, திருக்கடையூர்  அபிராமி  அம்மன்அபிராமபட்டருக்கு நேரில் காட்சியளித்த இடம், அபிராமி அந்தாதி 
 பாடப்பெற்ற திருத்தலம், பெண்களின்மாங்கல்ய பாக்கியத்திற்கு விசேஷமான ஸ்தலம்.  தை பூசத்தன்று இரவில் மிகவும்     திருப்தியுடன் கோவிலை தரிசிவிட்டுவிட்டு அங்கேயே தங்கினோம். நாங்கள் அங்கு குரு ஓட்டலில் தங்கினோம் கோவிலிலிருந்து  திரும்பியதும் எங்களுடன் வந்த என் கணவரின் உதவியாளருக்கு வேலுரிலிருந்து போன் வந்தது அவருடைய அக்காவுக்கும் அவர் கணவருக்கும் சிறிய மனக்கசப்பு அதில் அவருடைய அக்கா கணவரை பிரிந்து பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார் ஓரு குழந்தை பிறந்தும் கூட அக்காவை அவர் கணவர் வந்து பார்க்கவில்லை இதையெல்லாம் எண்ணிவருத்தபட்டுக்கொண்டுதான் உதவியாளர் எங்களுடன் வந்திருந்தார் . அவருடைய அக்காவை தன்னுடன் அழைத்து செல்ல அவர் கணவர் வந்திருப்பதாக தொலைபேசியில் தகவல் வந்தது எல்லாம் ஸ்ரீ அபிராமியின் கருணை என்று எண்ணி மனம் மகிழ்வுடன் நாங்கள் ஸ்ரீ அபிராமியை பிரிய மனமின்றி அங்கிருந்து கிளம்பி மறு நாள் அருகில் உள்ள கேதுவுக்கு உரிய கீழ்ப்பெரும் பள்ளம் சென்றோம்.        

வைத்தீஸ்வரன் கோவில்


                                                         


             வக்ரதுண்ட மஹாகாய ஸூரிய  கோடி  சமப்ரப
            அவிக்னம் குரு மேதேவ சர்வ கார்யேஷு சர்வதா !!!

     நாங்கள் கும்பகோணம், மயிலாடுதுறை அதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள கோவில்களை தரிசனம் செய்ய  வெகு   நாட்களாக ஆசை கொண்டிருந்தோம்.  ஒரு நாள் திடீரென்று முடிவு செய்து காரில் பயணம்செய்தோம்.  அன்று தைப்பூசம், பவுர்ணமி, வெள்ளிக்கிழமை, நாங்கள் வேலூரில் இருந்து திருவண்ணாமலை, திருக்கோவிலூர், வழியாக வைத்தீஸ்வரன் கோவில் தரிசித்துவிட்டு, திருக்கடையூரில் தங்கிவிட்டு, பிறகு பயணத்தை தொடர எண்ணினோம்.. ஆகவே,நாங்கள் முதலில் சென்ற கோவில் வைத்தீஸ்வரன் கோவில்.          . 

1. வைத்தீஸ்வரன் கோவில் :-

  ஈஸ்வரன் பெயர் :-  ஸ்ரீ வைத்தியநாதஸ்வாமி
  அம்பாள் பெயர்   :-  ஸ்ரீ தையல்நாயகி அம்மன்.



                                                  

     

நாங்கள் கோவிலை அடைந்தபோது உச்சிக்கால  அபிஷேகம், பூஜை என்று தைப்பூச விசேஷ்த்தால் கோவிலே அமர்க்களமாக  இருந்தது, திருப்திகரமான தரிசனம், நெய் விளக்கேற்றினோம். பின்னர் கணபதியை  தரிசித்துவிட்டு, ஸ்ரீ சுப்ரமணியரை தரிசித்தோம். இங்கு முருகன் பெயர் :-முத்து குமார ஸ்வாமி, இந்த ஸ்தலம்  (அங்காரகனுக்கு) செவ்வாய்க்கு பரிகார ஸ்தலம், இங்கு நவக்கிரகங்கள் ஒரே   திசையைப்  பார்த்துக்  கொண்டிருப்பர். ஆகையால் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் குறைவு.
 ஆலய  பிரகாரத்தில்,  தந்வந்த்ரி,  சட்டநாதர், ஜடாயுகுண்டம்   பார்க்க   வேண்டியவை. உடலில் தோன்றும்  மரு போன்றவை நீங்குவதற்காக உப்பு, மிளகினை  அதற்கெனவுள்ள இடத்தில் செலுத்திவிட்டு ,நமக்கு வரக்கூடிய எல்லாப்பிணிகளும்  நீரில் கரையும் வெல்லம் போல் கரைய வேண்டும் என்று  பிரார்த்தித்து  வெல்லத்தை குள்த்தில் கரைத்துவிட்டு , உண்டியலில் பணம்  செலுத்தினோம் இந்த கோவிலில் விபூதி பிர்சாதத்தில் உருண்டையாகவும் விபூதி  சேர்ந்திருப்பது விசேஷம். சதாபிஷேகம் ஒட்டலில் சாப்பாடு, பிறகு திருக்கடையூர், நோக்கி பயணம் செய்தோம்.

     இனி வரும் விவரங்கள் எல்லாம் நாங்கள் அடுத்தடுத்து போன கோவில்கள் பற்றிய செய்திகள், எங்கள் பயணத்தின் போது ஏற்பட்ட சிற்ப்பு நிகழ்ச்சிகள், கோவில்களில் பார்க்க வேண்டியவை முதலியனவாகும்.