வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப
அவிக்னம் குருமேதேவ சர்வகார்யேஷு சர்வதா!!
21.திருவெள்ளியங்குடி:-
ஸ்ரீ கோலவில்லி ராமர் கோவில்.
மூலவர்:- ஸ்ரீ கோலவில்லி ராமர்.
தாயார்:- ஸ்ரீ மரகதவல்லி.
உத்சவர்:- ஸ்ரீ சிருங்கார சுந்தரர்.![]() |
திருவெள்ளியங்குடி கோவில் |
இக்கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்ப்கோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் வழித்தடத்தில் சேங்கனூர் அருகில் உள்ளது.108 வைணவ திவ்யதேசங்களில் 22வது திவ்யதேசமாகும்.இக்கோவில் 2 பிரகாரங்களும், 4 தீர்த்தங்களும் உடையது.தீர்த்தங்கள்,சுக்ர,பராசர,பிரம்ம,இந்திர தீர்த்தங்களாகும்.இங்கு ஸ்தல விருக்ஷம் வாழைமரமாகும்.கோவிலை சுற்றி வரும்போது பாறைகளை துளைத்துக்கொண்டு செவ்வாழை மரம்,அதனடியில் வாழைக்கன்றுகளைக்காண மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
![]() |
செவ்வாழை |
இத்தலம் சுக்ர பரிகாரஸ்தலமாகும்.வாமன அவதாரத்தில்
மஹாபலிச்சக்ரவர்த்தி மூன்றடி இடத்தை ஸ்ரீ வாமனருக்கு தானம் கொடுக்கும்போது,அசுர
குருவான சுக்ராச்சாரியார், வண்டின் உருவெடுத்து ,தீர்த்தபாத்திரத்தின் துளையை அடைத்தாராம்.அதைக்கண்ட திருமால்,தர்ப்பையால் அந்த துளையை குத்தும்போது,வண்டின்
கண்களில் பட்டு,க்ண் குருடாகிவிட்டதாம்.வண்டின் உருவில் இருந்த சுக்ரன் தன் பிழையை
உணர்ந்து, சாபவிமோசனத்திற்காக் இந்ததலத்து இறைவனை அணையாவிளக்கு ஏற்றி
வழிபட்டாராம்.இன்றும்கூட சுக்ரன் ஏற்றிய தீபம் அணையாதீபமாக சுவாமி சன்னதியில்உள்ளது.வெள்ளிக்கு மறுபெயர் சுக்கிரன்.அதனால் இத்தலம் திருவெள்ளியங்குடி எனபெயர்பெற்றது
![]() |
திருவெள்ளியங்குடி உத்சவர் |
![]() |
சங்கு சக்கரத்துடன் கருடாழ்வார் |
விஸ்வகர்மா பெருமாளுக்கு வைகுண்டம்
அமைத்ததைப்போல்,மயன் தானுமொரு மாளிகையை
பெருமாளுக்கு கட்ட எண்ணினானாம்.பிரம்மா
இந்த இடத்தில் அதனைக்கட்ட பணித்தாராம். திருமால் மனமகிழ்ந்து மயனுக்கு
சங்கு சக்கரத்துடன் காட்சியளித்தாராம்.ஆனால் மயன் வில்லேந்திய இராமராக
காட்சியளிக்க வேண்டினாராம்.உடனே திருமால் தன்னுடைய சங்கு,சக்கரத்தை அருகிலிருந்த
கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு,இராமராக வில்லேந்தி காட்சியளித்தாராம்.அதனால்கருடன்,இங்குநான்குகரங்களுடன்,சங்கு,சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.வேறு எந்த
திருமால் ஸ்தலங்களிலும் காணமுடியாத சிறப்பு அம்சமாகும்.
மூலவர் சயன கோலத்தில் ஸ்ரீ
கோலவில்லி இராமராக காட்சியளிக்கின்றார்.பெருமாளின் தலைப்புறம் ஸ்ரீ
மார்க்கண்டேயரும், நடுவில் பிரம்மாவும்,காலடியில் பூமாதேவியும் உள்ளனர்.பெருமாளின்
பாதங்கள் தாமரை மலரின்மேல் உள்ளது.மூலவரின் முன்புறம் உத்சவர் ஸ்ரீசிருங்காரசுந்தரர்நின்ற
கோலத்தில்,கையில் கோதண்டத்துடன் காட்சியளிக்கிறார்.இருபுறமும் தேவியர்களும்அருள்புரிகின்றனர்.உத்சவருக்குதான்அபிஷேகஆராதனைகள்.மற்றஅனைத்து திவ்யதேசங்களையும்தரிசித்தபலன்இந்தஒருதிவ்யதேசத்தைதரிசித்தாலேகிடைக்கும்என கூறுகின்றனர்.சுக்ரன்,பிரம்மா,மயன்,மார்க்கண்டேயர்,பராசரர்,இந்திரன்,பூமாதேவி ஆகியோர்களுக்கு,நேரிடையாக திருமால் காட்சியளித்து அவர்களுடைய குறைகளை,சாபத்தை நீக்கியதாக புராண வரலாறு.
நாங்கள் அங்கு சென்றபோது,கோவில்
திருப்பணி செய்யவேண்டிய சூழலில் இருந்தது.தற்பொழுது ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகள்
அவர்கள்,இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்ய ஏற்பாடுகள் செய்து,எல்லாவேலைகளும்
நடைபெற்று வருகிறது. வரும் 2015 ம் வருடம்,ஏப்ரல் மாதத்தில்
கும்பாபி ஷேக வை பவம் நடைபெற
இருக்கின்றது..
எங்களின் 5 நாள்
பயணத்தை திருவெள்ளியங்குடி தரிசனத்துடன் முடித்துக்கொண்டு வேலூர்
திரும்பினோம்.வேலூரிருந்து கிளம்பியபொழுது இத்தனை ஸ்தலங்களை தரிசிப்போம் என நினைக்கவில்லை.இறைவனின்
அனுக்கிரகத்தாலும்,வழிகாட்டுதலாலும் இந்தப்பயணம் இனிதாக முடிவடைந்தது.எத்தனை
கோவில்கள்!!எவ்வளவு விஷயங்கள்!! இந்தப்பயணம் வருடம் முழுவதும் எங்கள் மனதில்
உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது என்றால் மிகையில்லை!! இந்தப்பயணத்தில்
கங்கை கொண்டசோழபுரம் செல்ல எண்ணியிருந்தோம்,ஆனால் முடியவில்லை.அதனால் மறுபடியும் 6
மாதங்களுக்குப்பிறகு விருத்தாசலம்,திருப்பனந்தாள்
கங்கைகொண்டசோழபுரம், சிக்கல், வேளாங்கண்ணி,வேதாரண்யம், மன்னார்குடி, ஊத்துக்காடு
என நாங்கள் பார்க்காத கோவில்களை
தரிசிக்க சென்றோம். அந்தப்பயணத்தின் நினைவுத்தொகுப்பினை மறுபடியும் பதிவு செய்ய
உள்ளேன்.