வக்ரதுண்ட மஹாகாய ஸூரிய கோடி சமப்ரப
அவிக்னம் குரு மேதேவ சர்வ கார்யேஷு சர்வதா !!
18:- கோவிந்தபுரம்
.ஸ்ரீ பகவன் நாம போதேந்திர சரஸ்வதி
ஸ்வாமிகள் அதிஷ்ட்டானம்
![]() |
ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் |
ஸ்ரீ பாண்டுரங்கன் கோவில் தரிசனத்தை முடித்துக்கொண்டு அருகிலேயே
உள்ள ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானத்துக்கு சென்றோம். வெளியில்
தென்படும் நுழைவுவாயிலிலிருந்து கொஞ்சதூரம் உள்ளே சென்றால் அதிஷ்டானத்தை
அடையலாம். மிகவும் அமைதியாக, எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் அதிஷ்டானம்
உள்ளது.அதற்கு எதிரில் கோசாலையும் உள்ளது.அதிஷ்டானத்திற்கு உள்ளே நுழைந்ததும் ஸ்ரீ ஆஞ்சனேயர் நம்மை எதிர்
கொள்கிறார்.மிகவும் பெரிய ஒரு கூடம்.அதில் ஒருபுறம் அதிஷ்டானத்தின் அலுவலகம்
உள்ளது.அக்கூடத்தின் மேல்விதானத்தில் ஸ்ரீ போதேந்திராள்,ஸ்ரீ ஸ்ரீதர
அய்யாவாள்,மருதாநல்லூர் ஸ்ரீ சத்குருஸ்வாமிகள்,ஸ்ரீபாண்டுரங்க பக்தர்கள் ஏக்நாத்,ஸ்ரீஞானேஸ்வர்
போன்றோரின் படங்கள் காணப்படுகின்றன.அதைக்கடந்து உள்ளே சென்றால் நடுவில் துளசி மாடத்துடன் ஸ்ரீ போதேந்திர
ஸ்வாமிகளின் ஜீவசமாதி!!.
என்ன ஒரு அமைதி!! என்ன ஒரு
புனிதத்துவம்!! நம் உடலே சிலிர்த்துப்போகிறது!
அதிஷ்டானத்தை பிரதக்ஷிணம் செய்வதற்கு
வசதியாக கூடத்தின் நடுவில் நான்குபுறமும்
தூண்களுடன் அமைந்துள்ளது ஸ்வாமிகளின் சமாதி. இடப்புறம் ஸ்ரீராமரின் படங்கள்நிறைந்த
ஓர் பூஜை அறை மிகவும் அழகுடனும்,தீப
அலங்காரங்களுடனும் காணப்பட்டது.நாங்கள் சென்றசமயம் அஸ்தமிக்கும் சமயமாத்லால் பாகவதர்கள் அந்த பூஜையறையின் எதிரில்
அமர்ந்து,ஸ்ரீ தியாகய்யரின் கீர்த்தனைகளை பாடிக்கொண்டிருந்தனர்.விவரிக்க இயலாத ஒரு
மன அமைதியே எங்களை ஆட்கொண்டது. எல்லா ஆசாபாசங்களையும் விட்டுவிட்டு அங்கேயே
இருந்துவிட மனம் ஏங்கியது என்றால் மிகையில்லை.
ஸ்ரீபகவ்ன்நாமபோதேந்திரசரஸ்வதிஸ்வாமிகள்,காஞ்சி மடத்தின் 59வது பீடாதிபதி.காஞ்சிபுரத்தில் ஸ்ரீமோகனபாண்டுரங்கன்,ஸ்ரீ சுகுணாதேவி தம்பதியருக்கு,அப்போதிருந்த ஸ்ரீ
விஸ்வாதிகேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளின் கருணையால் பிற்ந்தவர்.அவரின் பூர்வாசிரம பெயர் புருஷோத்தமன்.சிறு வயதில் ஸ்ரீ போதேந்திரருக்கு
ஞானசேகரன் என்னும் நண்பர் உண்டு இருவரும் காஞ்சி மடத்திலேயே
வேதங்களை கற்றுவந்தனர். அப்பொழுது ஸ்ரீவிஸ்வாதிகேந்த்ர ஸ்வாமிகள் வாரணாசி
சென்றதால்,நண்பர்கள் இருவரும் படிப்பு முடிந்ததும்,ஸ்வாமிகளை சந்திக்க நடந்தே
வாரணாசி சென்றனர்.செல்லும் வழியில் ஞானசேகரன் நோய்வாய்பட்டார்.அவர் இறக்கும்முன்
புருஷோத்தமன் என்னும் போதேந்திரரிடம் தன் அந்திமகாரியங்களை செய்ய சொன்னாராம்.பிறகு
வாரணாசியில் ஆசாரியரை தரிசனம் செய்தபின்னர் கங்கையில் மூழ்கி தம்மை வந்தடைய
வேண்டினாராம்.அதற்கு ஒப்புக்கொண்ட புருஷோத்தமன்,ஞானசேகரனது அந்திம காரியங்களை முடித்துவிட்டு,வாரணாசி சென்று ஸ்ரீ ஆசாரியரை
சந்தித்து விவரமெல்லாம் கூறி கங்கையில் மூழ்க முற்பட்டாராம்.ஆசாரியர் அவரை
தடுத்து,சன்யாசம் மேற்கொண்டாலே முற்பிறப்பு நீங்கிவிட்டதாக பொருள் என அவருக்கு
எடுத்துரைத்து,”ஸ்ரீ பகவ்ன் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்” என
பெயரிட்டு அவரை சன்யாசம் மேற்கொள்ளசெய்தாராம். சிறிதுகாலம் சென்றபிறகு அவருக்கு
தாரகமந்த்ரோபதேசம் செய்தாராம். ஸ்ரீராமநாமமே தாரகமந்திரமாகும்.பின்னர் அவரை பூரி
ஸ்ரீ ஜகன்னாதர் ஸ்தலத்துக்கு சென்று,ஸ்ரீ லக்ஷ்மிதர கவி அவர்கள் எழுதிய “பகவ்ன்நாம
காமுடி” என்னும் நூலை
அவரிடம் பயின்று, பகவன் நாமத்தின்
விசேஷத்தை உலகமெங்கும் பரப்பவேண்டும் என ஆசிர்வதித்து அனுப்பினாராம்.பூரி சென்ற
ஸ்ரீ போதேந்திரர்,ஸ்ரீ லக்ஷ்மிதர கவி அவர்களை இரவு நேரத்தில் தொந்தரவு செய்ய
விருப்பமின்றி வெளியிலேயே காத்திருந்தாராம்.அப்பொழுது ஒரு பிராமணர்,தன் மனைவியுடன்
ஸ்ரீ லக்ஷ்மிதர கவியைக் காண வந்தார்.ஸ்ரீ லக்ஷ்மிதர கவி வெளியூர்
சென்றிருந்ததால்,அவரது மகன் ஜகன்னாதகவி அந்த பிராமணரைக்கண்டு விவரம் என்னவென்று
கேட்டாராம்.அதற்கு அப்பிராமணர்,தானும் தன் மனைவியும் சிலநாட்களுக்குமுன்வட இந்தியாவுக்கு யாத்திரை செல்ல
வந்ததாகவும், அவ்வூரில் தங்கியிருந்தபோது தன் மனைவி காணாமல் போய்விட்டதாகவும்,தான்
மட்டும் யாத்திரை முடித்து திரும்புகையில் மிகவும் நலிவுற்று அடையாளமேதெரியாமல்
இருந்த தன் மனைவி தன்னை அடையாள்ம் கண்டு,தன்னை வேற்று மதத்தினர் சிலர்
கடத்திச்செனறுவிட்டதாகவும், அவர்களிடமிருந்து காப்பாற்றி தன்னை அழைத்துச்செல்லும்படி வேண்டியதாகவும் கூறினார். அவரது மனைவி அவரிடம் தன்னை மனைவியாக ஏற்காவிடடாலும்
பரவாயில்லை,பணிப்பெண்ணாக ஏற்றுக்கொள்ளச்சொல்வதாக கூறினார்.இவ்விஷயத்தில் என்ன
முடிவு எடுப்பதென ஆலோசனை கேட்கவே தாம் அங்கு வந்ததாக கூறினார்.அதற்கு ஜகன்னாத கவி
அவரிடம் அருகில் இருக்கும் குளக்கரைக்கு மறு நாள்
வரும்படி கூறினார். மறுநாள் குளக்கரையில் மக்கள்
எல்லோரும் கூடியிருக்க, ஜகன்னாதகவி அந்த பெண்மணியை குளத்தில் மூன்று முறை ராம நாமத்தை ஜபித்துக்கொண்டே தலைமுழுகி எழுந்து
வரச்சொன்னார். கண்கொள்ளாக்காட்சியாக அப்பெண்மணி பழைய உருவத்துடனும், தேஜஸுடனும்
எழுந்துவரவே மக்கள் எல்லோரும் ராமநாமத்தின் மகிமையை உணர்ந்துகொண்டனர். இந்த
நிகழ்ச்சியை நேரில்கண்ட ஸ்ரீ போதேந்திரரும் ஸ்ரீ லக்ஷ்மிதரகவியிடம் “பகவ்ன் நாம காமுடி”என்னும் அவரது நூலை கற்று,அதற்கு விளக்கவுரை எழுதினாராம்.அன்று
முதல் ஸ்ரீ போதேந்திரர் பகவ்ன் நாமத்தின்
மகிமையை எல்லோரிடமும் கொண்டுசேர்க்க முயற்சிகளை மேற்கொண்டார்.
![]() |
ஸ்ரீ போதேந்திரர் ஸ்ரீதர அய்யாவாள் ஸ்ரீ சத்குருஸ்வாமிகள் |
பூஜைகள்,யாகங்கள் மட்டுமின்றி நாமசங்கீர்த்தனத்தாலும்
இறைவனை அடையலாம் என பாமரமக்களுக்கு ஸ்ரீ போதேந்திரர் எடுத்துரைத்தார். கலிகாலத்தில்
பகவன் நாம்த்தை பஜனைகளாலும், நாமசங்கீர்த்தனங்களாலும் துதித்தால் இறைவனின் கருணையை பெறலாம் என எடுத்த்ரைத்தார்.”பகவன்நாம
ரஸோதயம்” போன்ற பலநூல்களையும் அவர்எழுதியுள்ளார்.அவருடனஸ்ரீஸ்ரீதரஅய்யாவாளும்இணைந்து,தென்தமிழ்நாட்டின்மூலை முடுக்கெல்லாம் நாமசங்கீர்த்தனத்தின்
பெருமையை உரைத்ததாகவரலாறு.அந்தகாலகட்டத்தில்ஸ்ரீபோதேந்திரர்,ஸ்ரீதரஅய்யாவாள்,மருதாநல்லூர் சத்குருஸ்வாமிகள் ஆகிய மூவரும்
சம்ப்ரதாயநாமசங்கீர்த்தனத்தின் மும்மூர்த்திகள எனஅழைக்கப்பட்டனர் ஸ்ரீ ராமநாமத்தின்
பெருமையை ஸ்ரீ போதேந்திரர் எடுத்துரைத்தார்.தமிழ்நாட்டில் அவர் கால்கள் படாத இடமே
இல்லை எனலாம்.
சுமார் 100 வருடங்களுக்கு பிறகு அவர்
சமாதியடைந்த இடத்தை மருதாநல்லூர் சத்குருஸ்வாமிகள் கண்டுபிடித்தார்.அதுவும்
எப்படியென்றால், தவறுதலாகக்கூட குருவின் சமாதியில் தன் கால்கள்
பட்டுவிடக்கூடாதென்று கால்களை கயிற்றால் கட்டிக்கொண்டு தவழ்ந்துகொண்டே
சென்றாராம்.காவிரிக்கரையில் ஓரிடத்தில் ராமஜபம் கேட்டுக்கொண்டே
இருந்ததாம்.அவ்விடத்தில் ஸ்வாமிகளின் சமாதியை கண்டு பிடித்தாராம்.காவிரியில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சமாதி மூழ்கிவிடும் என்பதால்,அப்போது தஞ்சையை ஆண்ட
மன்னரிடம் காவிரிக்கரையை அகலப்படுத்தி,ஆடுதுறை பக்கம் திருப்பிவிட
வேண்டினாராம்.அந்த மன்னரும் அவ்வாறே செய்ய,ஸ்ரீ போதேந்திரர் சமாதியை மன்னன்
உதவியுடன் கட்டியதாக வரலாறு.அதிஷ்டானத்தில் இரவு தங்குபவர்களுக்கு இன்றும் கூட
ராமநாம ஜபம் கேட்பதாக கூறுகின்றனர்.இரவில் ஒவ்வொருசமயம் கையில் தண்டத்துடன்
ஸ்ரீபோதேந்திரர் காட்சியளிப்பதாகவும் கூறுகின்றனர்
. கி.பி.1600 களில் ஸ்ரீ
போதேந்திரர் வாழ்ந்ததாக கூறுகின்றனர்.இன்றுநாம்அவரது அதிஷ்டானத்தையாவதுதரிசிக்கும்பாக்யம்கிட்டியதைஎண்ணிமனம்கிழ்ந்தோம்.அதிஷ்டானத்தில் பாடசாலையும்
நடத்துகிறார்கள்.நம்மால இயன்றஉதவிகளையும்,கைங்கர்யமும் செய்யலாம்.விசேஷநாட்களில் சிறப்புபூஜைகளும்நடக்கின்றன.பாகவதர்கள் பஜனைக்கு வரும்போதுதங்குவதற்குஅறைகளும்உள்ளன.அதிஷ்டானத்தின் வெளிப்புறம் கோசாலையும் உள்ளது. பசுக்களுக்கு நம்
கைகளால் அகத்திக்கீரை போன்றவற்றை அளிக்கலாம்.
நாங்கள்சென்றபோது, ஸ்ரீபோதேந்திராளின்அதிஷ்டானத்துக்கு அருகிலேயே காஞ்சி ஸ்ரீமஹாபெரியவாளின் தபோவனத்தினகட்டுமான
பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
![]() |
ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவர் |
![]() |
மஹாஸ்வாமிகள் தபோவனம்,கோவிந்தபுரம் |
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
கோவிந்தபரத்தில் ஒரு புறம் ஸ்ரீ பாண்டுரங்கனது மகிமையை ஸ்ரீ தக்ஷிண பண்டரிபுரம் கோவில் கூறுகிறது மற்றொரு புறம் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியின் மகிமையை ஸ்ரீ போதேந்திரரின் அதிஷ்டானம் உரைக்கின்றது.
![]() |
ஸ்ரீ பாண்டுரங்கன்,ஸ்ரீ ராமர்,ஸ்ரீ கிருஷ்ண பக்தர்கள் |
ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் அதிஷ்டான தரிசனத்தை முடித்துக்கொண்டு மிகுந்த மனநிறைவுடன் இப்படிப்பட்ட ஸ்தலங்களை
தரிசிக்க அனுக்கிரகம் அளித்த இறைவனுக்கு மனமாற நன்றி
கூறியபடி அங்கிருந்து கிளம்பினோம்.எங்களது அடுத்தஊர் தாராசுரம்.
No comments:
Post a Comment