வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப
அவிக்னம் குருமேதேவ சர்வகார்யேஷு சர்வதா!!
20.பட்டீஸ்வரம்:-
ஈஸ்வரன் பெய்ர்:-ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்,ஸ்ரீ
பட்டீஸ்வரர்
அம்பாள்:- ஸ்ரீ ஞானாம்பிகை,ஸ்ரீ பல்வளைநாயகி
ஸ்ரீ துர்கைக்கு வடக்கு பார்த்து தனி
விமானத்துடன் கூடிய தனி சன்னதி.
பட்டீஸ்வரம் கும்பகோணத்திலிருந்து 8
கி.மீ..தொலைவில் உள்ளது.இதன் புராண்ப்பெயர் மழபாடி.இந்தக்கோவிலின் ஸ்தலவிருக்ஷம்
வன்னி. இங்குள்ள தீர்த்தம் ஞானவாவி.இக்கோவில் 1000,2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது
என கூறுகின்றனர்.திருஞானசம்பந்தர் தேவாரம்
பாடிய திருத்தலம்.
ஒருசமயம் பார்வதி தேவி சிவனை வேண்டி தவமிருக்க
அம சதியும் நிம்மதியும் நிறைந்த இந்த
இடத்தை தேர்ந்தெடுத்து தவம் செய்யத்தொடங்கினாராம். அப்போது அவருக்கு உதவிசெய்ய
காமதேனு தன் மகள் பட்டியை அனுப்பியதாம்.ஸ்ரீ பார்வதிதேவியின் தவத்தை மெச்சி சிவன்
ஜடாமுடியுடன் தோன்றினாராம்.அதனால் அவர் ஸ்ரீ கபர்தீஸ்வரர் என
அழைக்கப்பட்டாராம்.இந்த நிகழ்ச்சியைப்
பார்த்துக்கொண்டிருந்த பட்டி, மணலினால் லிங்கம் அமைத்து, தானும் சிவனை வேண்டி
தவமிருந்ததாம்.பட்டியின் தவத்தை மெச்சிய இறைவன் ஸ்ரீ பட்டீஸ்வரர் ஸ்ரீ
தேனுபுரீஸ்வரர் என்ற நாமங்களுடன் இங்கு
கோவில் கொண்டார்.இந்த ஊரும் பட்டீஸ்வரம் என வழங்கப்பட்டது.இக்கோவிலில் உள்ள
லிங்கம் சுயம்பு லிங்கமாகும்.
![]() |
பட்டீஸ்வரம் கோவில் தோற்றம் |
சைவக்குரவர்கள நால்வரில்மிகவும்சிறியவரான திருஞானசம்பந்தர்,அடியார்களுடன் ஸ்ரீ தேனுபுரீஸ்வரரை
தரிசிக்க வந்தார்.அச்சமயம் ஆனிமாத்மாத்லால் வெய்யில் கடுமையாக,உஷ்ணக்காற்றுடன்
இருந்தது.சிறு குழந்தையான சம்பந்தர் மிகவும் இன்னலுற்றார்.அதனைக்கண்ட ஈசன் தன்
பூதகணங்களை முத்துப்பந்தலுடன் சம்பந்தரிடம் அனுப்பி அவரை முத்துப்பந்தலின் நிழலில்
அழைத்துவரச்செய்தார்.சம்பந்தர் வரும் அழகைகாண தன் எதிரில் இருந்த நந்தியையும்
சற்றே விலகி இருக்கச்செய்தார்.இன்றும் கூட மூலவரின் எதிரில் நந்தி விலகி இருப்பதைக்
காணலாம்.இந்தக்கோவிலில் ஆனிமாத முத்துப்பந்தல் உத்சவம் கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது.ஸ்ரீ ராமர், வாலியை வதம்செய்த்தால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை
இங்குள்ள சிவனை வழிபட்டு போக்கிக்கொண்டாராம் ஸ்ரீ விஸ்வாமித்திர மகரிஷிக்கு “ஸ்ரீ
காயத்ரி மந்திரம்” சித்தியடைந்ததும்,
அவருக்கு “பிரும்மரிஷி”
பட்டம் கிடைத்ததும் இவ்விடத்தில்தானாம்!இச்சம்பவங்கள் அனைத்தும் கோவிலின்
பிரகாரத்தில் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.மார்க்கண்டேயரும் இத்தலத்தை பூஜித்ததாக
வரலாறு.சப்தமாதாக்கள்,ஸ்ரீமஹாலக்ஷ்மி,ஸ்ரீ ரேணுகாதேவி, நவக்கிரகங்கள்,சூர்யசந்திரர்கள்,பைரவர் சன்னதிகள் உள்ளன.வடபுற்த்தில்
அம்பாளின் சன்னதி காணப்படுகின்றது.கோவிலின் சிற்பங்களும் பிரகாரங்களும் மிகவும்
அழகாக செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் எதிரிலேயே குளம் உள்ளது.
![]() |
கோவில் பிரகாரம் |
![]() |
திருஞான சம்பந்தர் முத்துப்பந்தலின் கீழ் வருதல் |
தல வரலாறு |
.கோவிலின் வடபுறத்திலேயே ஸ்ரீ துர்க்கைக்கு தனி விமானத்துடன் கூடிய வடக்குபார்த்த் கோவில் அமைந்துள்ளது. நாங்கள் முதலில் துர்கையை தரிசித்து அர்ச்சனை செய்துவிட்டு,பின்னர் ஸ்ரீ தேனுபுரீஸ்வரரை தரிசித்தோம் துர்க்கை கோவில் கொண்டிருக்கும் இடத்தில் மேல்விதானத்தில் மிக அழகான மராட்டியமன்னர் காலத்து ஓவியங்களைக் காணலாம் பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் மிகவும் விசேஷம்!! ஸ்ரீ துர்கை அம்மன் சாந்தசொரூபியாய்,மகிஷன் தலைமீது நின்ற கோலத்தில்,இடப்புறம் நோக்கிய சிம்மவாகனத்துடன்,திரிபங்க ரூபமாய், அஷ்டபுஜங்களுடன், முக்கண்களுடன்,காதுகளில் குண்டலங்களுடன் காட்சி அளிக்கின்றாள்!! சங்கு,சக்கரம்,கேடயம்,வில்,அம்பு,கத்தி முதலிய ஆயுதங்களை கைகளில் ஏந்தி,வலது கை அபயமுத்திரைகாட்டி,மடித்த இடதுகை மேற்புறத்தில் கிளியுடன் அம்பாள் காட்சியளிக்கின்றாள்!! இடப்புறம் நோக்கிய சிம்மவாகனம் அன்னையின் சாந்தஸ்வரூபத்தை குறிக்கும் என்கின்றனர். மாமன்னர் ராஜராஜ சோழன் முதலானவர்கள் வழிபட்ட அம்பிகை இந்த துர்கை!! சோழர் மாளிகையில் அரண்மனை காவல்தெய்வமாக அருள்பாலித்தவள்!!சோழ அரண்மனை வாயிலில் வினாயகர், முருகர், பைரவரும் எழுந்தருளியிருந்தனர். சோழமன்னர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும், வெற்றிவாகை சூட போர்க்களம் செல்லும்போதும் இந்த அம்பிகையின் அருள்வாக்கைப் பெற்றபின்னரே செல்வர்.சோழராஜ்ஜியம் முடிவுக்கு வந்த பின்னர், அம்பிகையை இங்கு பிரதிஷ்டை செய்தனர்.இன்றும் துர்கைக்கு எலுமிச்சம்பழ மாலைகள் சாற்றி,தீபமேற்றி,வஸ்திரங்கள் அணிவித்து,பிரார்த்தனை செய்பவர்களுக்கு, வரங்களை அள்ளித்தரும் அன்னையாய்,அகிலாண் டேஸ்வரியாய் அம்பிகை விளங்குகின்றாள் என்பதில் ஐயமில்லை!!
![]() |
ஸ்ரீ பட்டீஸ்வரம் துர்கை |
துர்கை கோவில் வாயில் |
மராட்டிய ஓவியங்கள் |
ஸ்ரீ துர்கைகோவில் மேல்விதானம் |
No comments:
Post a Comment