வக்ரதுண்ட மஹாகாயசூர்யகோடிசமப்ரப
அவிக்னம்
குருமேதேவ ஸர்வ கார்யேஷு சர்வதா!!
- எங்களுடைய அடுத்த பயணத்தை 6 மாதங்களுக்குப்பிறகு தொடங்கினோம்.எங்களுடைய இலக்கு கடலூர் மாவட்டததில் உள்ள விருத்தாசலம்.எந்த வித பயணத்திட்டமும் போட்டுக்கொள்ளவில்லை.முதலில் அவ்வூரில் உள்ள ஸ்ரீ விருத்தகிரீஸ்வரரை தரிசித்து பின்னர் புது தலங்களாக,முக்கியமாக நாங்கள் இதுவரை தரிசிக்காத தலங்களாக செல்வது என் திட்டமிட்டோம்.நாங்கள் கிளம்பிய மாதம் மாசி.அன்று மாசிமகம்.பௌர்ணமி.மாசிமாதம் ஸ்ரீ விருத்தகிரீஸ்வரருக்கு 10 நாட்கள் உற்சவம்.இவற்றைப்பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை. விருத்தாசலத்தை நெருங்கும்போது ஒரே மக்கள் கூட்டம்.ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டங்கூட்டமாக கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.ஒரே திகைப்பாக இருந்தது!!சிறு வயதில் எங்கள் ஊரான குளித்தலையில் தைப்பூசத்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.அங்கு ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தம். தைப்பூசத்தன்று காவேரிக்கரையில் தீர்த்தவாரி நடக்கும்.அருகிலுள்ள 8 ஈஸ்வரன்கோவில்களிலிருந்து உத்சவ மூர்த்திகள்,காவேரிக்கரையில் தரிசனம் த்ருவார்கள்.அன்று காவேரிக்கரை முழுவதும் விதவிதமான கடைகளும்,இரவு உத்சவ மூர்த்திகள் உள்ள பந்தலில் இரவு முழுவதும் பாட்டுக்கச்சேரிகளுமாக அமர்க்களப்படும்.அனைத்து ஊர்களிலிருந்தும் மக்கள் திரண்டு வருவார்கள்.தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நட்க்கும். நாங்களும். மிகவும் ஆனந்தமாக கண்டுகளிப்போம்.இங்கு விருத்தாசலத்தில அவ்வளவு மக்கள் கூட்டத்தைப்பார்க்கவும் எனக்கு சிறுவயது நினைவுகள் அலைமோதின.
1. விருத்தாசலம்
ஈஸ்வரன்
பெயர்:-ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்,ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீமுதுகுன்றர்.
அம்பாள் பெயர் – ஸ்ரீ
விருத்தாம்பிகை, ஸ்ரீபாலாம்பிகை, ஸ்ரீ பெரியநாயகி
![]() |
விருத்தாசலம் கோவில் |
இனி இத்தலத்து
வரலாற்றினை பார்ப்போம்.இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக தோற்றமளிக்கிறார்.1000,
2000 வருட பழமை வாய்ந்த கோவில்.சரியாக சொன்னால் திருவண்ணாமலை கோவிலுக்கு முன்பே தோன்றிய
கோவில் என கூறுகிறார்கள்.இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்ததாம். விபசித்துமுனிவர்
இங்கு ஓர் இரவு தங்கி மறுநாள் விழித்ததும் இறைவன் ஆணைப்படி திருப்பணி செய்யும்
பேறு பெற்றாராம்.இங்கு எல்லாமே 5.
மூர்த்திகள்,தீர்த்தங்கள்,வினாயகர்,கோபுரங்கள்,தேர்கள்,
கொடிமரங்கள்,,பிரகாரங்கள் என எல்லாம் 5 தான்.இவ்வூரின் பெயரும் 5.திருமுதுகுன்றம்,
விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை,முதுகிரி என 5 பெயராகும்..இங்கு சிவன்
சுயம்பு மூர்த்தியாவார்.ஸ்தலவிருட்சம்
வன்னிமரம்.
இத்தலத்தில்
பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் முக்தி நிச்சயம்.
ஸ்ரீவினாயகருக்கு 5 படைவீடுகள் இங்கு உள்ளன. ஆழத்து வினாயகர், மாற்றுரைத்த
வினாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி. அதில். ஸ்ரீ ஆழத்து
வினாயகர்.இச்சன்னதி ஸ்ரீ காளத்தியில் உள்ளதுபோல் 18 படிகள் இறங்கி. தரிசனம் செய்யும் வண்ணம் உள்ளது.முக்கியமான
சைவ திருத்தலங்கள் 22ல் இதுவும் ஒன்று.இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற 274
திருத்தலங்களில் 220வது தலமாகும்.
இங்கு
முருகன் 28 ஆகமங்களுக்குரிய 28 லிங்கங்களை அமைத்து சிவனை வழிபட்டாராம்.ஸ்ரீ
வள்ளி,ஸ்ரீ தெய்வானையுடன்,ஸ்ரீ முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.முருகன்
உடனுறைக்குமேல் சக்கரம் அமைந்துள்ளது. மாசிமாதம் 10 நாட்கள் திருவிழா .10ம் நாள் தேர்.மாசிமகம் விசேஷம். இக்கோவிலுக்கு
திருப்பணி செய்யும்போது விபசித்து முனிவர், இங்குள்ள தலவிருட்சமாகிய வன்னிமரத்தின்
இலைகளையே கூலியாகத் தருவாராம்.அவை அனைத்தும் பொற்காசுகளாக
மாறிவிடுமாம்.திருவாரூரில் பங்குனி உத்திரத்தன்று அன்னதானம் செய்ய ஸ்ரீ சுந்த்ரர் பொருள்
சேகரிக்க இத்தலம் வரும்போது,இத்தலத்து ஈசன் அவருக்கு 12,000 பொற்காசுகள் அளித்தாராம்.திருடர்களுக்கு
பயந்து சுந்தரர் அவற்றை எடுத்துச்செல்ல தயங்கியபோது,ஈசன் அவற்றை மணிமுத்தாறில்
இட்டு அப்பொருளை திருவாரூரில் பெற்றுக்கொள்ளச்செய்தாராம்.”ஆற்றில்
போட்டு குளத்தில் தேடுவது போல” எனும்
பழமொழி அப்போதுதான் தோன்றியதாம்.குளத்தில் எடுத்த பொற்காசுகளின் தரம் பற்றி
சுந்தரர் சந்தேகப்படவே,ஈசன் மாற்றுரைத்த வினாயகரை சோதிக்கச்செய்து சுந்தரரிடம்
பொன்னை அளித்தாராம்.
இங்குள்ள மணிமுத்தாநதியில் நீராடி
மூலவர் பழமலைநாதரை வழிபட்டால் காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன்
கிடைக்குமாம்.இது முக்தி தலம்.காசியினும் வீசம் அதிகம் விருத்தகாசி எனபது
பழமொழி.இங்கு இறந்தவர்களை ஸ்ரீ விருத்தாம்பிகை தன் மடியிலிட்டு,புடவைத்தலைப்பால்
விசிறி அவர்களின் பாவங்களை போக்குகின்றாள்.ஈஸ்வரன் அவளருகிலமர்ந்து அவர்களின்
காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதுகிறாராம். இக்கோவிலில் முன்னோர்களுக்கு திதியும்
கொடுக்கிறார்கள்.இங்குள்ள நதியில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால் அது கல்லாக
மாறிவிடுமாம்.
குரு நமச்சிவாயர் ஒருமுறை இங்கு தங்கியபோது அம்பாளை “சோறு
கொண்டுவா கிழத்தி” என அழைத்தாராம்.அம்பாளோ கிழவி எப்படி சோறு தருவாள்
என்று வினவ,”அத்தன் இடத்தாளே,முற்றா இளமுலை மேலார் வடத்தாளே,சோறு
கொண்டு வா” என்றழைக்க,அம்பாள் மனமகிழ்ந்து
அன்னமளித்தாகவும்,அதனால் அம்பாளுக்கு “இளையநாயகி” எனற்
பெயரும் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
ஒருமுறை உலகம் அழிந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது எனும் சிறப்பைப்பெற்றது.இக்கோவிலில்
துர்க்கையம்மன் ஸ்ரீ விருத்தாம்பிகை அம்மனுக்கு இடப்புறம் நின்றகோலத்தில்
அமைந்துள்ளாள்.ஒருமுறை எனது உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது,விருத்தாசலத்தில் பூக்களைப்பறித்து ஆற்றில் இட்டால்,அவை திருவாரூரில் கமலாலயத்துக்கு வந்து சேருமாம் என்று கூறினார்.அப்பொழுது எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை.இக்கோவிலை தரிசித்து,தலபுராணம்பற்றி அறிந்ததும்தான் அதன் அர்த்தம் புரிந்தது.இக்கோவில் பழமையாகவும்,சிதிலமடைந்தும் காணப்படுகிறது..தமிழக அரசு இதை கவனித்து சீரமைத்தல் வேண்டும்.
இப்படி பலவித சிற்ப்புகளைப்பெற்ற ஸ்ரீ
விருத்த்கிரீஸ்வரரையும் அம்மனையும் தரிசித்துவிட்டு மிகுந்த மனநிறைவுடன்
அங்கிருந்து அடுத்த தலத்துக்கு புறப்பட்டோம். நாங்கள் சென்ற அடுத்த தலம்
கங்கைகொண்ட சோழபுரம்.
.
![]() |
விருத்தாசலம் கோவில் கோபுரம் |
இ
No comments:
Post a Comment