வக்ரதுண்ட மஹாகாய ஸூரிய கோடி சமப்ரப
அவிக்னம் குரு மேதேவ சர்வ கார்யேஷு சர்வதா !!!
நாங்கள்
கும்பகோணம், மயிலாடுதுறை அதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள கோவில்களை தரிசனம் செய்ய வெகு நாட்களாக
ஆசை கொண்டிருந்தோம். ஒரு நாள் திடீரென்று
முடிவு செய்து காரில் பயணம்செய்தோம். அன்று
தைப்பூசம், பவுர்ணமி, வெள்ளிக்கிழமை, நாங்கள் வேலூரில் இருந்து திருவண்ணாமலை,
திருக்கோவிலூர், வழியாக வைத்தீஸ்வரன் கோவில் தரிசித்துவிட்டு, திருக்கடையூரில்
தங்கிவிட்டு, பிறகு பயணத்தை தொடர எண்ணினோம்.. ஆகவே,நாங்கள் முதலில் சென்ற கோவில் வைத்தீஸ்வரன்
கோவில். .
1. வைத்தீஸ்வரன் கோவில் :-
ஈஸ்வரன் பெயர் :- ஸ்ரீ வைத்தியநாதஸ்வாமி
அம்பாள்
பெயர் :- ஸ்ரீ தையல்நாயகி அம்மன்.
நாங்கள் கோவிலை அடைந்தபோது உச்சிக்கால அபிஷேகம், பூஜை என்று தைப்பூச விசேஷ்த்தால் கோவிலே
அமர்க்களமாக இருந்தது, திருப்திகரமான
தரிசனம், நெய் விளக்கேற்றினோம். பின்னர்
கணபதியை தரிசித்துவிட்டு, ஸ்ரீ
சுப்ரமணியரை தரிசித்தோம். இங்கு முருகன் பெயர் :-முத்து குமார ஸ்வாமி,
இந்த ஸ்தலம் (அங்காரகனுக்கு)
செவ்வாய்க்கு பரிகார ஸ்தலம், இங்கு நவக்கிரகங்கள் ஒரே திசையைப் பார்த்துக் கொண்டிருப்பர். ஆகையால் நவகிரகங்களால்
ஏற்படக்கூடிய தோஷங்கள் குறைவு.
ஆலய பிரகாரத்தில்,
தந்வந்த்ரி, சட்டநாதர், ஜடாயுகுண்டம் பார்க்க
வேண்டியவை.
உடலில் தோன்றும் மரு போன்றவை நீங்குவதற்காக உப்பு, மிளகினை அதற்கெனவுள்ள இடத்தில் செலுத்திவிட்டு ,நமக்கு வரக்கூடிய
எல்லாப்பிணிகளும் நீரில் கரையும் வெல்லம்
போல் கரைய வேண்டும் என்று
பிரார்த்தித்து வெல்லத்தை
குள்த்தில் கரைத்துவிட்டு , உண்டியலில் பணம் செலுத்தினோம் இந்த கோவிலில் விபூதி
பிர்சாதத்தில் உருண்டையாகவும் விபூதி
சேர்ந்திருப்பது விசேஷம். சதாபிஷேகம் ஒட்டலில் சாப்பாடு, பிறகு திருக்கடையூர்,
நோக்கி பயணம் செய்தோம்.
இனி வரும்
விவரங்கள் எல்லாம் நாங்கள் அடுத்தடுத்து போன கோவில்கள் பற்றிய செய்திகள், எங்கள்
பயணத்தின் போது ஏற்பட்ட சிற்ப்பு நிகழ்ச்சிகள், கோவில்களில் பார்க்க வேண்டியவை
முதலியனவாகும்.





No comments:
Post a Comment