Tuesday, 26 August 2014

திருக்கடையூர், ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்






                வக்ரதுண்ட மஹாகாய ஸூரிய  கோடி  சமப்ரப
               அவிக்னம் குரு மேதேவ சர்வ கார்யேஷு சர்வதா !!!

2. திருக்கடையூர்:-

         ஈஸ்வரன் பெயர் :-  ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் 
   அம்பாள் பெயர் :-      ஸ்ரீ அபிராமி அம்மன் 
   உற்சவர் பெயர் :-    ஸ்ரீ காலஸம்ஹாரமூர்த்தி
   அம்பாள் பெயர் :-      ஸ்ரீ பாலாம்பாள்


            


       
  

    

       இங்கு  24   மணி    நேரமும்     மேளவாத்தியங்களும்     நாதஸ்வரங்களூம் ஒலித்துக்கொண்டேயிருக்கும். மிகவும் விசேஷமான ஸ்தலம். 60-ம் கல்யாணம் (சஷ்டியப்த பூர்த்தி) சதாபிஷேகம் என்று தினமும் கல்யாணம், கோவிலில் நுழையும்போது மேளதாளம்தான்,
     பாற்கடலில்  கிடைத்த   அமிர்தத்தை  கலசத்துடன்  விநாயகர்   திருடிவந்ததால்,  அவருக்கு கள்ளவாரணப்பிள்ளையார்  என்று    பெயர்.  அமிர்தம்    கிடைத்த   குடமே லிங்கமாக மாறியதால்,ஈஸ்வரனுக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயர். இங்கு  
மார்க்கண்டேயரை துரத்திய யமனை  ஈஸ்வரன் காலால் எட்டி உதைத்து  சம்ஹாரம்  பண்ணியதால் உற்சவருக்கு  கால சம்ஹார மூர்த்தி   என்று பெயர். இங்கு விநாயகரை தரிசித்தபின் முல்லை வனநாதரை தரிசிக்க வேண்டும். பின்னர் ர்ஸ்வரனை தரிசிக்கவேண்டும். இங்கு நவக்கிரகம் கிடையாது.

ஸ்ரீஅபிராமி அம்மனுக்கு தனி சன்னதி உண்டு, திருக்கடையூர்  அபிராமி  அம்மன்அபிராமபட்டருக்கு நேரில் காட்சியளித்த இடம், அபிராமி அந்தாதி 
 பாடப்பெற்ற திருத்தலம், பெண்களின்மாங்கல்ய பாக்கியத்திற்கு விசேஷமான ஸ்தலம்.  தை பூசத்தன்று இரவில் மிகவும்     திருப்தியுடன் கோவிலை தரிசிவிட்டுவிட்டு அங்கேயே தங்கினோம். நாங்கள் அங்கு குரு ஓட்டலில் தங்கினோம் கோவிலிலிருந்து  திரும்பியதும் எங்களுடன் வந்த என் கணவரின் உதவியாளருக்கு வேலுரிலிருந்து போன் வந்தது அவருடைய அக்காவுக்கும் அவர் கணவருக்கும் சிறிய மனக்கசப்பு அதில் அவருடைய அக்கா கணவரை பிரிந்து பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார் ஓரு குழந்தை பிறந்தும் கூட அக்காவை அவர் கணவர் வந்து பார்க்கவில்லை இதையெல்லாம் எண்ணிவருத்தபட்டுக்கொண்டுதான் உதவியாளர் எங்களுடன் வந்திருந்தார் . அவருடைய அக்காவை தன்னுடன் அழைத்து செல்ல அவர் கணவர் வந்திருப்பதாக தொலைபேசியில் தகவல் வந்தது எல்லாம் ஸ்ரீ அபிராமியின் கருணை என்று எண்ணி மனம் மகிழ்வுடன் நாங்கள் ஸ்ரீ அபிராமியை பிரிய மனமின்றி அங்கிருந்து கிளம்பி மறு நாள் அருகில் உள்ள கேதுவுக்கு உரிய கீழ்ப்பெரும் பள்ளம் சென்றோம்.        

No comments:

Post a Comment