வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரப
அவிக்னம் குருமேதேவ சர்வகார்யேஷு சர்வதா!!
15.அய்யாவாடி:-
ஈஸ்வரன்
பெயர்:- ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்.
அம்பாள் பெயர்:-
ஸ்ரீ தர்மசம்வர்த்தினி
சிறப்பு சன்னதி:- ஸ்ரீ பிரத்யங்கராதேவி ஸ்ரீபிரத்யங்கராதேவிக்கு சிறப்புயாகங்களும் நடைபெறுகின்றன. .
அய்யாவாடி, கும்பகோணத்திலிருந்து 6 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது.ஸ்ரீ பிரத்யங்கரா தேவி கோவில் என்று கேட்டாலே இந்தஊரை
குறிப்பிடுகின்றனர். ஸ்ரீ உப்பிலியப்பன் கோவிலுக்கு அருகில் உள்ளது. மூலவர் ஸ்ரீ
அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கி
உள்ளார்.அம்பாள் ஸ்ரீ தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கி உள்ளார். ஈஸ்வரன் சன்னதியில் வில்வமர சட்டத்தில்,
ருத்ராக்ஷம் கோர்க்கப்பட்டு ருத்ராக்ஷப்பந்தல் போடப்பட்டு அழகாக உள்ளது.
அதனால் ஈஸ்வரன் சன்னதியில் தீபம் ஏற்றுவதிலும், தீபாராதனை செய்வதிலும் தனிக்கவனத்துடன் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.ஸ்ரீ சம்பந்தர்
இந்த ஆலய மூலவரைப்பற்றி பாடியுள்ளார்.
இங்கு ஸ்தலவிருக்ஷம் ஆலமரம். ஒரே
ஆலமரத்தில் 5 மரத்தின் இலைகள் உள்ளன.ஆல், அரசு, மா, புரசு, இச்சி முதலியன ஒரே
மரத்தில் தென்படுகின்றன. ஈஸ்வரன் சன்னதி அருகிலேயே ஸ்ரீ பிரத்யங்கராதேவி சன்னதி
உள்ளது
ஸ்ரீ பிர்த்யங்கரா தேவி:-
ஸ்ரீ சரபரின்
நெற்றிக்கண்ணிலிருந்து இந்ததேவி
தோன்றியதாக வரலாறு.ஸ்ரீ சரபரின் இறக்கைகளில் ஒன்றில் ஸ்ரீ சூலினி துர்க்கையும்,
மற்றொன்றில் ஸ்ரீபிரத்யங்கராதேவியும் இருப்பதாகக் கூறுகின்றனர்.ஸ்ரீ பிர்த்யங்கரா
தேவி, கரியநிறத்துடன். சிம்மமுகம், 18 கரங்களுடனும் தலையில் ச்ந்திரகலை,கைகளில்
சூல்ம்,பாசம்,,டம்ருகத்துடனும்,இருபுறமும் ஸ்ரீ லக்ஷ்மி,ஸ்ரீ சரஸ்வதி தேவியருடனும்
காணப்படுகின்றாள்.
![]() |
ஸ்ரீ பிரத்யங்கரா தேவி |
![]() |
ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் |
ஒவ்வொரு அமாவாசைதோறும், இங்கு
தேவிக்கு நிகும்பலா யாகம் நடக்கிறது.காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த யாகம்
நடக்கிறது.
இந்த யாகத்தில் 108 வகையான ஹோம சாமான்களை இடுகின்றனர். 40,000
பேர் கலந்துகொள்வதாக கூறுகின்றனர்.இந்த யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் வற்றலை
இடுகிறார்கள்,ஆனால் கொஞ்சம் கூட
மிளகாய்நெடியோ, கமறலோ ஏற்படுவதில்லை. ஸ்ரீபிரத்யங்கராதேவியையும்,ஈஸ்வரன்,அம்பாளையும்
தீபமேற்றி அர்ச்சனைசெய்து வணங்கிவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம். எங்களது
அடுத்த ஊர், சுக்கிரனுக்கு உரிய பரிகார ஸ்தலமாகிய
கஞ்சனூர்.
ஈஸ்வரன் பெயர்:-ஸ்ரீ அக்னீஸ்வரர்.
அம்பாள் பெயர்:- ஸ்ரீ கற்பகாம்பாள்.
சிற்ப்பு சன்னதி:- ஸ்ரீ சுக்கிர பகவான்.
இது சுக்ர பரிகார ஸ்தலம். தேவியுடன் ஸ்ரீ சுக்கிரன் அருள்பாலிக்கிறார்.
இது சுக்ர பரிகார ஸ்தலம். தேவியுடன் ஸ்ரீ சுக்கிரன் அருள்பாலிக்கிறார்.
கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் கஞ்சனூர் அமைந்துள்ளது.இங்கு மூலவர் ஸ்ரீ
அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கி உள்ளார்.ஸ்ரீ சுக்கிரபகவானின் மொத்த உருவமாக
ஈஸ்வரனே அமைந்துள்ளார். பிரம்மாவுக்கு ஸ்ரீபார்வதி,ஸ்ரீபரமேஸ்வரனின் திருக்கல்யாண வைபவத்தைக்காணும் பேறு கிடைத்த இடம் கஞ்சனூர் என கூறுகின்றனர்
நவக்கிரக்ங்களில் குருவுக்கு அடுத்தபடியாக நன்மைகள் அளிப்பவர் சுக்கிரன் எனப்படும்
வெள்ளியாகும்..
சுக்கிராச்சாரியார்,
அசுரர்களின் குரு.அவர் அமிர்த சஞ்சீவன மந்திரத்தை அறிந்தவராதலால் தேவாசுர யுத்ததின்பொழுது மடிந்த அசுரர்களை உயிர்த்தெழ செய்தார்.அதனால் தேவர்கள் ஈஸ்வரனிடம்
சென்று முறையிட்டனர். ஈஸ்வரன் கோபமுற்று
சுக்கிரனை விழுங்கி தன் வயிற்றில் யோகநிலையில் அவரை
அமரச்செய்துவிட்டார்.சுக்கிரன்
ஸ்ரீகற்பகாம்பாளை வேண்டி தவம் செய்ய, அம்பாளும் ஈஸ்வரனிடம்
சுக்கிரனை விடுவிக்கவேண்டியதால் ஈஸ்வரன் அவரை விடுவித்து, சுக்கிரனின்
மொத்த உருவமாக ஸ்ரீ அக்னீஸ்வரராக தோன்றி
கஞ்சனூரிலேயே நிலைபெற்றார் என்று
கூறுகின்றனர்.ஸ்ரீஅக்னிபகவான் இங்கு சிவபெருமானை பூஜித்ததாலும் ஈஸ்வரன் ஸ்ரீ அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். வாமன அவதாரத்தில் ஸ்ரீ
மஹாவிஷ்ணு, மஹாபலியிடம் மூன்றடி இடம்
கேட்டபோது, மஹாபலிசக்ரவர்த்தி, தானம் தந்து நீர் வார்க்கும்போது, கெண்டியின்
துளையை வண்டு உருவெடுத்து சுக்கிரன் அடைத்தாராம். அப்பொழுது தர்ப்பைப்புல்லினால் வாமனர்
அத்துளையை குத்தும்போது
சுக்கிரனின் கண்கள் குருடாகியது அந்த பாவம் தீர,ஸ்ரீ மஹாவிஷ்ணு
இந்தத்தலத்தில் ஸ்ரீஅக்னீஸ்வரரை வணங்கி
தன் பாவத்தை போக்கிக்கொண்டாராம்.இந்த ஸ்தலம் பலாசவனம், பிரம்மபுரி, அக்னிஸ்தலம்
எனவும் அழைக்க்ப்படுகின்றது.
ஸ்ரீ சுக்கிர பகவான், தனி
சன்னதியில் தேவியருடன்
காணப்படுகிறார்.இவர், ரிஷப, துலா ராசிக்கு
அதிபதி. ஜாதகருக்கு கல்வி,செல்வம், நீண்டஆயுள்,.சந்தோஷம்,
புத்திரபாக்கியம் கொடுப்பவர் சுக்கிரன். ஸ்ரீமஹாலட்சுமி அவரை ஆட்சிசெய்கின்றாள். மொச்சைப்பயறு நிவேதனம் செய்து, வஸ்திரம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
ஸ்ரீ அக்னீஸ்வரர் |
![]() |
அக்னி ஸ்தலம் விவரம் |
![]() |
ஸ்ரீ சுக்கிர பகவான் |
![]() |
கஞ்சனூர் கோவில் |
.
No comments:
Post a Comment