Friday, 10 October 2014

திருவிடைமருதூர்,ஸ்ரீ பெருநலமாமுலை அம்மை சமேத ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்


                             
                             வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி  சமப்ரப
                       அவிக்னம் குருமேதேவ சர்வகார்யேஷு  சர்வதா!!


             14. திருவிடைமருதூர்:-
          ஈஸ்வரன் பெயர்:- ஸ்ரீ  மகாலிங்கேஸ்வரர்.
          அம்பாள்  பெயர்:-  ஸ்ரீ பிருஹத் சுந்தர குஜாம்பாள். (பெருநலமாமுலை அம்மை)   
ஸ்ரீ,அம்பாள்,  ஸ்ரீஈஸ்வரன்,ஸ்ரீமூகாம்பிகை
                         
திருவிடைமருதூர் கோவில்



          
                  
                       கும்பகோணத்திலிருந்து  9 கிலோமீட்டர்  தூரத்தில் திருவிடைமருதூர்  அமைந்துள்ளது. மிகவும் நீண்ட  பெரிய. கோவில். நான்கு பெரிய கோபுர  வாயில்களையும், மூன்று பிரகார சுற்றுகளையும் கொண்டது. அஸ்வமேத  பிரகாரம்,  கொடுமுடி  பிரகாரம்,  பிரணவ பிரகாரம்  என இந்த  மூன்று பிரகாரங்களும் அழைக்கப்படுகின்றன.ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்  ஜோதிர்மயலிங்கம்.அகத்திய முனிவருக்கு ஜோதிர்மயமாக ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் காட்சியளித்தாராம். திருவிடைமருதூர் மத்யார்ஜுனம், அதாவது  இடைமருதூர். ஸ்ரீசைலம்  தலைமருதூர். திருநெல்வேலி  அம்பாசமுத்திரத்தில் உள்ள  திருபுடைமருதூர்  கடைமருதூர் ஆகும். மருதமரத்தினை ஸ்தலவிருக்ஷமாககொண்ட, பழமையான, சிறப்புமிக்க கோவில்கள் இவை மூன்றுமாகும்.இது பஞ்சலிங்கஸ்தலமாகும். தேரோடும் நான்கு வீதிகளிலும் ஸ்ரீ விஸ்வநாதர்,ஸ்ரீ ரிஷிபுரேஸ்வரர், ஸ்ரீ ஆத்மநாதர், ஸ்ரீ சொக்கநாதர் கோவில்கள் அமைந்துள்ளன.  இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. இங்கு 5 குளங்கள் உள்ளன.அவை காருண்யாமிர்த தீர்த்தம், சோமதீர்த்தம், கனகதீர்த்தம், கல்யாணதீர்த்தம்,ஐராவததீர்த்தம் என்பனவாகும்இத்தலத்துஇறைவனை,அப்பர்,சுந்தரர்,சம்பந்தர் பாடியுள்ளனர்.பட்டினத்தார் பிறந்த ஊராகும்.இங்கு ஸ்ரீதர அய்யர்வாள் சமாதியும் உள்ளது.

கோவிலின் உட்புறத்தோற்றம்


                    அகத்தியர், மற்ற முனிவர்களுடன்  இந்த தலத்து  அம்மையை  பூஜித்தாராம்.அப்பொழுது ஸ்ரீ பார்வதிதேவி காட்சி கொடுக்க, அவரிடம் சிவனையும் த்ரிசிக்க வேண்டினார்களாம்.பார்வதி தேவி சிவனை வேண்ட,சிவன் ஜோதிர்மயமாக காட்சியளித்தாராம்.பின்னர் சிவன் தானும் பார்வதியுடன் சேர்ந்து  தன்னையே  பூஜித்துக்கொண்டாராம். பார்வதி தேவி அதற்கு காரணம் கேட்க, பூஜிக்கவேண்டிய முனிவர்கள்  தன்னை முதலில் பூஜிக்காததால் தானே தன்னை பூஜித்ததாக கூற, முனிவர்கள் தங்கள்  த்வறை உணர்ந்து, அன்று முதல் இத்தலத்து இறைவனை தினமும் பூஜித்துவருவதாக தலபுராணம். . ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்  சுயம்பு லிங்கம். இக்கோவிலில் தஞ்சை பிருஹதீஸ்வரர் கோவிலில் உள்ளது போன்ற மிகவும் பெரிய நந்திகேஸ்வரர் காணப்படுகின்றார்.அந்த   நந்தியை கடந்து உள்ளே சென்றால் வலதுபுறத்தில் 27 நட்ச்த்திரங்களுடன் சந்திரன் பூஜித்த லிங்கங்களும்,அவற்றின் விசேஷங்களும் தெரிய வருகின்றன. சந்திரன் தன் சாப விமோசனத்திற்காக, 27 லிங்கங்களை
த்னித்தனியாக அமைத்து,தன் 27 மனைவிகளுடன் பூஜித்ததாக  வரலாறு. சந்திரனுக்கும் தனியாக ஒரு சிறப்பு சன்னதி உள்ளதுஅதனை அடுத்து, நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.பின்னர் சோழ பிரும்மஹத்தி  தனியாகஒரு மாடத்தில் அமைந்துள்ளது வரகுண பான்டிய மன்னன் தன் பிரும்ம்கத்தி தோஷம் தீர, (சோழமன்னன் என்றும் கூறுகின்றனர்) ஸ்ரீ மகாலிங்கேஸ்வரரை தரிசிக்க கோவிலின் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழையும்போது பிரும்மகத்தி ஈஸ்வரனை தரிசிக்க அஞ்சி அங்கு தங்கி,
பாண்டியமன்னன் திரும்பும்போது,அவனை பிடித்துக்கொள்ள காத்திருந்ததாக வரலாறு.ஆனால் மன்னனோ வேறொரு வாயில் வழியாக வெளியேறிவிட்டாராம்.அதனால் இப்பொழுதும்  கோவிலில் ஈஸ்வரனையும் அம்பாளையும் தரிசித்து,பின்னர் அங்கிருந்து வேறுவழியாக அதாவது மேற்கு வாசல்வழியாக வெளியில்  வரும் வழக்கம் உள்ளது. கோவிலினுள் பிரும்மகத்தி இருக்கும் இடமும் இரும்பு கிராதியால் பூட்டப்பட்டுள்ளது.              
27 நட்சத்திரங்கள் பற்றிய விவரம்
      

                            சுவாமி சன்னதிக்கு இடப்புறம் ஆண்ட வினாயகர் சன்னதி உள்ளது.அங்குள்ள பிரகாரத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனால் அளிக்கப்பட்ட 1000 வருடங்கள் பழமையான மிகவும் அழகான தீபநாச்சியார் என அழைக்கப்படும்  பாவை விளக்கும்,அதனைப்பற்றிய விவரங்களும் உள்ளன. இங்கு ஸ்தல விருக்ஷம் மருதமரம். இம்மரத்தடியில் காஸ்யப முனிவருக்கு ஈஸ்வரனே ஸ்ரீகிருஷ்ணனாக காட்சியளித்தா
சிம்மக்குளம்
ராம்.இம்மரத்தை 3 முறை சுற்றி வந்தால் கைலாயத்தை சுற்றிவந்த பலன் உண்டு என கூறுகின்றனர் ஸ்தல விருக்ஷம் அருகிலேயே ஸ்ரீ சுப்ரமணியருக்கு தனி கோவிலும், சிம்மக்குளமும் அமைந்துள்ளன. இக்கோவிலில் வெளிப்பிரகாரத்தில் நாங்க்ள் கண்டு வியந்த விஷயம் ஒன்று உண்டு.அது என்னவென்றால்     நம் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், அக்காலத்திலேயே மழைநீர் சேமிப்புக்காக பிரகாரத்தில் தரையில் துளைகள் அமைத்து,அம்மழைநீர்  குளங்களில் சேரும்படியாக அமைத்து இருந்தனர். சிம்மக்குளம் அருகிலும் அப்படிப்பட்ட  அமைப்பை காணமுடிந்தது.                                                
நந்தி பகவான்
கோவில்  பிரகாரம்
ஸ்தலவிருக்ஷம்,மருதமரம்




          அம்மன் சன்னதிக்கு செல்லும்போது,முதலில் பிரியாவிடை அம்மனை தரிசித்துவிட்டு,பிற்கு ஸ்ரீ பிருஹ்த்சுந்தரகுசாம்பாளை தரிசிக்கவேண்டும்.அம்பாளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!! சக்திபீடங்களில் இந்த பீடமும் ஒன்று! இங்கு ஸ்ரீ சக்ர மஹாமேரு உள்ளது. அருகிலேயே ஸ்ரீ மூகாம்பிகைக்கு தனிக்கோவில் உள்ளது. இங்கு
ஸ்ரீ மூகாம்பிகையை பிடாரி பரமேஸ்வரி எனவும் அழைக்கின்றனர்.கர்னாடக
மானிலத்தில்,கொல்லூரில் சௌபர்ணிகா நதிக்கரையில் ஸ்ரீ மூகாம்பிகைக்கு தனிககோவில் உள்ளது.அதனையடுத்து இங்கு காவேரிக்கரையில் தனிக்கோவில் உள்ளது.
                                  இது முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோவிலாகும்.இக்கோவிலுக்கு,பாண்டிய, சோழ, நாயக்கர் வம்சத்தினர், விஜயநகர,ஹொய்சள மராட்டிய வம்சத்தினர் சிற்ப வேலைப்பாடுகளும், செய்துள்ளனர். பலவித காணிக்கைகளும் அளித்துள்ளனர்.ஆனால் தற்பொழுது உள்ள அமைப்பு சோழர் காலத்தை சேர்ந்தது. வெளிப்பிரகாரத்தில் சிற்ப வேலைப்பாடுகளும்,மராட்டிய மன்னர்கள் அளித்த அலங்கார விளக்குகளும் பிரமிக்க வைக்கின்றன. இந்த கோவிலில்  மிகவும் திருப்தியளித்த ஒரு விஷயம் என்னவென்றால், கோவிலின் பணியாளர் ஒருவரே எங்களுக்கு கோவில்பற்றிய விவரங்கள் சொல்லி கோவிலையும் சுற்றிக்காட்டினார்.அவரைப்போலவே  நிறைய ஆட்கள்  நமக்கு வழிகாட்ட தாமாகவே முன்வருகின்றனர்.இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தைச்சேர்ந்தது. மிகவும்  நன்றாக பராமரித்துவருகிறார்கள். பிரகாரத்தில் ஒரு இடத்தில் உள்ள இராவணன்  சிலையின் வெளிப்புறசுவரில் ஒரு ஓட்டையில் காதை வைத்துகேட்டால் இராவணேஸ்வரனின்  வீணை ஒலியும், வேத கோஷங்களும் கேட்பதாகச்சொல்கிறார்கள்
                     
திருவிடைமருதூர் குள்ம்.
ஸ்வாமி புறப்பாடு
    
           நாங்கள்  கோவிலை அடைந்தபோது சாயங்காலமாகிவிட்டதால் கோவிலே ஜகஜ்ஜோதியாகவும்,ஒருபுறம் ஓதுவார்கள் சீடர்களுக்கு தேவாரம் கற்றுகொடுத்துக்கொண்டும், அமர்க்களமாக இருந்தது. ஈஸ்வரனையும், அம்பாளையும் தரிசித்துவிட்டு வெளியில் வரும்போது,ஸ்வாமி புறப்பாடுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள்.இங்கு தைப்பூசம் 10நாட்கள் ஸ்வாமி புறப்பாடு,திருவீதியுலா உண்டு.வைகாசி மாதத்தில் திருக்கல்யாணம்,அம்மன் தபசு முதலியவை விசேஷம். ஸ்வாமி புறப்பாட்டையும் தரிசித்துவிட்டு, மிகுந்த மனத்திருப்தியுடன் திருவிடைமருதூரிலிருந்து கிளம்பினோம். 

No comments:

Post a Comment