வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப
நிர்விக்னம் குருமேதேவ சர்வகார்யேஷு சர்வதா!!
3. கீழ்ப்பெரும் பள்ளம் :-
ஈஸ்வரன்
பெயர் :- ஸ்ரீ
நாகநாத ஸ்வாமி
அம்பாள்
பெயர் :- ஸ்ரீ
சௌந்தரநாயகி
இந்த ஸ்தலம் நவக்கிரகங்களில்
கேதுவுக்கு உரியது. கொள்ளூ தானியம், கேதுவுக்கு
விசேஷம்.
நெய் விளக்கு ஏற்றிவிட்டு, தொட்டில் வாங்கி கட்டிவிட்டு, கேதுவுக்கு பல நிறங்களுடைய
வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்தோம்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி திருவெண்காடு
சென்றோம். மிகவும் பிரசித்தி
பெற்ற புதன் ஸ்தலம்.
![]() |
ஸ்ரீஅகோரமூர்த்தி |
இங்கு தீர்த்தங்கள் மூன்று,தல விருக்ஷங்கள் மூன்று. இங்கு புதனுக்கு தனி ஆலயம் உள்ளது இது ஆதி சிதம்பரம் எனவும் அழைக்க்ப்பெறுகிறது. இங்கு ஆல மரத்தடியில் ஸ்ரீ ருத்ர பாதம் உள்ளது. அதனால் முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் கொடுத்தால் 27 தலைமுறைகளுக்கு நன்மை தரும் எனபது செவிவழி செய்தியாகும் .ஸ்ரீ அகோரமூர்த்திக்கு, ஞர்யிறன்று இரவு அபிஷேகம் செய்பவர்கள் வேண்டுவன எல்லாம் கிடைக்கும் என்கின்றனர். அம்பாள், பிரம்மனுக்கு வித்தையை கற்பித்ததால் பிரம்ம வித்யாம்பிகை என்று பெயர். மிகவும் பெரியகோவில்.பிறகு அங்கு மூலவருக்கும்,புதன் பகவானுக்கும் அர்ச்சனை செய்து பக்ச்சைப்பயறு தானியத்தில் நெய்விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொண்டு பூம்புகார் சென்றோம்.
அங்கு அரசு அருங்காட்சியகம் பார்த்துவிட்டு, கடற்கரையை அடைந்தோம்.
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் ப்ற்றிய நினைவுகள் மனதில் எழுந்தன. கீழே
காண்பது பூம்புகாரில் உள்ள் அரசு அருங்காட்சியகம்
No comments:
Post a Comment