வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப
அவிக்னம் குருமேதேவ சர்வகார்யேஷு சர்வதா!!
5. மாயவரம் ( மயிலாடுதுறை) :-
ஈஸ்வரன் பெயர்:- ஸ்ரீ மயூரநாதர்
அம்பாள் பெயர்:-
ஸ்ரீ அபயாம்பிகை
எங்களுடைய அடுத்த இலக்கு,
திருமீயச்சூர்
ஸ்ரீ லலிதாம்பிகை கோவில். மாயவரத்திலிருந்து பேரளம்
வழியாக திருமீயச்சூர் போக முடிவு
செய்தோம். பேரளம்
ஸ்ரீ மஹாமாரியம்மன் கோவில். நாங்கள் சென்ற வழியிலேயே
இருந்த்தால் மாரியம்மனையும் தரிசித்தோம். நாங்கள்
செல்வதற்கு முதல்நாள் தீ மிதி திருவிழா
நடந்ததால் மிகவும் அருமையான
தரிசனம் கிட்டியது. சிறிய
கோவில். மிகவும் அழகான அம்மன்.மிகுந்த மனநிறைவுடன் தரிசனத்தை முடித்துக்கொண்டு, திருமீயச்சூர் கிளம்பினோம். பேரளத்திலிருந்து
திருமீயச்சூர் 2 கிலோமீட்டர்
தூரம்தான்.
6. திருமீயச்சூர்:
ஈஸ்வரன் பெயர்:-
ஸ்ரீ மேகநாத ஸ்வாமி
அம்பாள் பெயர்:-
ஸ்ரீ லலிதாம்பிகை
இங்கு ஈஸ்வரன் ஸ்ரீ மேகநாத ஸ்வாமி.சுயம்பு லிங்கம்.இங்கு 2 லிங்கங்கள் அமைந்துள்ளன. அப்ப்ரும் சம்பந்தரும் இவ்விரு லிங்கங்களை பாடியுள்ளனர். .ஸ்ரீ ஹயக்ரீவர்,அகஸ்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் உபதேசித்த ஸ்தலம். பூவுலகில் எந்த இடத்தில் இதை பாராயணம் செய்தால் முழுப்பலன் கிடைக்கும் என வினவ , இந்ததலத்தை ஹயக்ரீவர் சொன்னதாக புராணம் மூலவர் இருக்கும் பிர்காரத்தில் சிவனும் அம்மனும் சேர்ந்து இருக்கும் கோலம் க்ஷேத்ரபுராணேஸ்வர்.இந்த சிற்பத்தில அம்மன் முகம் ஒருபுறம் பார்த்தால் கோபமாகவும் மறுபுறம் பார்த்தால் புன்சிரிப்புடனும் தெரிவது அற்புதம். கோவில்கலசத்தை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால் ஈஸ்வரன்(லிங்கோத்பவர்), விஷ்ணு, பிரம்மா என்று மூன்று தெய்வங்களையும் ஒன்றாக தரிசனம் செய்யலாம். இங்கு துர்க்கையின் இடதுகையின் மேற்புறம் கிளி செதுக்கப்பட்டு உள்ளது.இது மிகவும் விசேஷம். இந்த அம்சத்தை ஸ்ரீ பட்டீஸ்வரம் துர்க்கையிடமும் காணலாம்.இந்த கிளியிடம் நம் கோரிக்கையை தெரிவித்தால் அது அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகையிடம் அதனை தெரிவிக்குமாம்.
இந்த கோவிலில் கிளிகளும் தென்படுகின்றன. இங்கு அருணன், கருடன், வாலி, சுக்ரீவன், யமன், சனீஸ்வரன், ஆகியோர் பிறந்துள்ளனர். பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் வைத்து நிவேதனம் செய்கின்றனர். இது இக்கோவிலின் சிறப்பு, இதன் மூலம் அனைத்து தோஷங்களும நீங்கும் என்பது நம்பிக்கை.
தேவி ஸ்ரீ லலிதாம்பிகை
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி,ஸ்ரீ லலிதாமபிகையே!!
ஸ்ரீ
சக்ரபீடத்தில் வலதுகாலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு, அற்புதமான அழகுடன் பண்டாசுரனை
வதம் செய்த அன்னை மனோன்மணியாக
காட்சி அளிக்கிறாள் ஸ்ரீ லலிதாம்பிகை. அன்னையின் அழகை
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சர்வால்ங்காரபூஷிதையாக அம்பாள் வீற்றிருக்கின்றாள்.தன்
பக்தையிடம் காலுக்கு கொலுசு வேண்டும் என்று கேட்ட தேவியாவாள்.கர்னாடக மாநிலத்தில் ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாமத்தை தின்மும் பாராயணம்செய்து வந்த தன் பக்தையின் கனவில் அம்பாள் தோன்றி தன் காலுக்கு கொலுசு வேண்டும் என் கேட்டாளாம்.அந்த பக்தைக்கு தன் கனவில் தோன்றிய தேவி எந்த கோவிலில் குடி கொண்டிருக்கிறாள் என தெரியாமல், கடைசியில் திருமீயக்சூரில் அம்பாளைக் கண்டுகொண்டார்களாம் அங்குள்ள அர்ச்சகரிடம் அம்பாள் காலுக்கு கொலுசு போட காலில் இடைவெளி உள்ளதா என பார்க்க சொன்னாராம்.தொடர்ந்த அபிஷேகங்களால் அடைத்துக்கொண்டிருந்த துளையை நீக்கி இடைவெளி இருப்பதை அர்ச்சகர் கண்டுபித்தாராம்.பிறகு அந்த பக்தை அம்பாளுக்கு கொலுசு அணிவிக்கச்செய்தாராம்.அதிலிருந்து அங்கு வருபவர்கள் சன்னதியில் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமமும், ஸ்ரீ லலிதா நவரத்னமாலையும் பாராயணம் செய்து கொலுசு சாற்றி பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள் நாங்கள் ஸ்ரீ லலிதா
நவரத்னமாலை பாராயணம் செய்தோம்.அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டு அடுத்த ஊருக்கு
புறப்பட்டோம். (சில நாட்களுக்குப்பின் நாங்கள் 15 பேர் கொண்ட குழுவாக திருமீயச்சூர் சென்று ஸ்ரீ லலிதாசஹஸ்ர நாமம் பாராயணம் செய்து,அம்பாளுக்கு வஸ்திரம்,தண்டுமாலை,கொலுசு அணிவித்து கண்குளிர தரிசித்து விட்டு வந்தோம்.) நாங்கள் அம்பாளை தரிசிக்கும்போது எங்களுடன் இணைந்து ஸ்ரீ லலிதாநவரத்னமாலையை பாடிய பெண்மனி எங்களை அவரது ஊரான மின்னலூருக்கு ஸ்ரீ ராதாகல்யாண உத்சவம் பார்க்க அழைத்தார்.எனவே அங்கு சென்றுவிட்டு ஸ்ரீ ராதாகிருஷ்ணரை தரிசித்துவிட்டு பஜனையையும் கேட்டு மகிழ்ந்தோம். பின் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.எங்களின் அடுத்தஊர் திருப்பாம்புரம்.. தேவி ஸ்ரீ லலிதாம்பிகை
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி,ஸ்ரீ லலிதாமபிகையே!!
No comments:
Post a Comment