வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரப
அவிக்னம் குருமேதேவ சர்வகார்யேஷு சர்வதா!!
7 திருப்பாம்புரம்:-.
ஈஸ்வரன் பெய்ர்:-
ஸ்ரீ பாம்புர நாதர், ஸ்ரீ சேஷபுரீஸ்வரர்.
அம்பாள் பெயர் :- ஸ்ரீ வண்டுசேர்குழலி, ஸ்ரீ
பிரமராம்பிகை.
இந்த
ஸ்தலம் ராகு,கேது ஏக சரீரமாக இறைவனை பூஜித்த ஸ்தலம்.
தென்காளஹஸ்தி எனவும் அழைக்கப்பெறும்
ஸ்தலம். இந்தஸ்தலம் குடந்தை,திருநாகேஸ்வரம், நாகூர், கீழ்ப்பெரும்பள்ளம்,காளஹஸ்தி
ஆகியவற்றின் பெருமைகளை ஒருங்கே அமையப்பெற்ற ஸ்தலம்.
மயிலாடுதுறையிலிருந்து கொல்லுமாங்குடி,
கற்கத்தி வழியாக திருப்பாம்புரம் செல்லலாம். நாங்கள் திருமீயக்சூரிலிருந்து
மின்னலூர் சென்றதால்,வயல்களின் வழியே திருப்பாம்புரம் சென்றோம்.
இது
சர்வதோஷப்ரிகார ஸ்தலம். இது பஞ்சலிங்க ஸ்தலம். ஒருவரின் ஜாதகத்தில் காலசர்ப்ப
தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம் இருந்தால்,கடன்தொல்லைகள் இருந்தால் இங்கு
பரிகாரம் செய்யலாம். இங்கு சர்ப்பங்கள் தீண்டாது. அப்படி தீண்டினாலும் அவற்றின்
விஷம் ஏறாது. ஆதிசேஷன் சிவனை பூஜித்த
ஸ்தலம். 9 நெய் தீபங்கள் ஏற்றி ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்தோம்.பின்னர் அங்கிருந்து கிளம்பி
திருவாரூரை அடைந்தோம்.நாங்கள்
திருப்பாம்புரத்திலிருந்து
கிளம்பும்பொழுதே 1 மணியாகிவிட்டதால் மற்ற ஸ்தலங்களை 4 மணிக்கு மேல்தான் தரிசனம் செய்ய இயலும் என்பதால்,திருவாரூர்
சென்று ஹோட்டல் “செல்லீஸில்”
தங்கினோம்.
ஏக சரீரமாக உள்ள ராகு,கேதுவுடன் ஸ்ரீ வண்டுசேர் குழலி சமேத ஸ்ரீ சேஷபுரீஸ்வரர்.
16.5.2002 ம் ஆண்டு ஒரு பெளர்ணமி நாளில் பாம்பு சிவன் மீது தன் சட்டையை மாலையாக அணிவித்திருந்த புகைப்படம்
திருவாரூரில் மதிய உணவை முடித்துக்கொண்டு அறையில் சென்று ஓய்வெடுத்தோம். எங்களுடைய அடுத்த கோவில் ஸ்ரீ வாஞ்சியத்தில் உள்ள ஸ்ரீ வாஞ்சிநாதர் கோவில்.
No comments:
Post a Comment