வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப
அவிக்னம் குருமேதேவ சர்வ கார்யேஷு சர்வதா!!
8.ஸ்ரீவாஞ்சியம்:-
ஈஸ்வரன் பெயர்
:- ஸ்ரீ வாஞ்சிநாதர்.
அம்பாள் பெயர் :- ஸ்ரீ மங்களாம்பிகை
இங்கு எமனுக்கு தனி கோவில். ஈஸ்வரனுடைய
வாகனமே எமதர்மராஜாதான் .இக்கோவிலில் ஸ்ரீ அபயங்கர வினாயகர், ஸ்ரீ யோகபைரவர்,ஸ்ரீ
மஹிஷாசுரமர்த்தினி சந்நிதிகள் உள்ளன.இங்கு முதலில் ஸ்ரீ யமதர்மராஜா சன்னிதியை
தரிசித்துவிட்டு, பின்னர் ஸ்ரீ கணபதியை தரிசிக்க வேண்டும்.அதற்குப்பிறகுதான்
மூலவரை தரிசிக்க வேண்டும். கங்கா நதியும் தன் பாவத்தை போக்க
இங்குள்ள குப்த கங்காதீர்த்தத்தில்
ஸ்நானம் செய்ததாக வரலாறு சந்தியாகாலத்தில் ஸ்ரீ மங்களாம்பிகைக்கு வெண்மைநிறத்தில்
புடவை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.சுமங்கலிகளின் தீர்க்கசௌமாங்கல்ய
பாக்யத்திற்காக அம்பாள் வெண்மை நிற புடவை அணிவதாக ஐதீகம்..கார்த்திகை மாதத்தில்
ஞர்யிற்றுக்கிழமை இங்கு விசேஷம்.
No comments:
Post a Comment