வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப
அவிக்னம் குருமேதேவ சர்வகார்யேஷு சர்வதா!!
10.திருச்சேறை:-பெருமாள் கோவில் பெருமாள்:- ஸ்ரீ சாரனாதப்பெருமாள் பிராட்டிகள்:- ஸ்ரீ சாரநாயகி, ஸ்ரீ ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, ஸ்ரீ நீலாதேவி, ஸ்ரீ மஹாலக்ஷ்மி. பெருமாளுடன் 5 பிராட்டிகள் காணப்படும் ஒரே திவ்ய தேசம திருச்சேறையாகும். இது சார க்ஷேத்ரம். இடம்,கடவுள்,அம்பாள்,புஷ்கரணி,விமானம் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச சாரக்ஷேத்ரமாகும்.திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையிலேயே திருச்சேறை உள்ளது.நாங்கள் அங்கு சென்ற சமயம் முதல்நாள் தேரோட்டம் முடிந்து, உற்சவரை கோவிலில் தரிசித்தோம் தேரும் அதே அலங்காரங்களுடன் புஷ்கரணி பக்கத்தில் காணப்பட்டது.கோவில் எதிரிலேயே புஷ்கரணியும் மிகுந்த அழகுடன் காண்ப்பட்டது.புஷ்கரணியின் மேற்கு கரையில் அகஸ்தியர்,பிர்ம்மா,காவேரி தனி சன்னிதிகளுடன் அமைந்துள்ளனர் உட்பிரகாரத்தில் ஸ்ரீனிவாசப்பெருமாள்,ஆழ்வார்கள்,நம்மாழ்வார்,கூரத்தாழ்வார்,உடையவர், ஸ்ரீராஜகோபாலன்,ஆண்டாள் சத்யபாமா,ருக்மணி,ராமர்,ஹனுமான் சன்னதிகள் உள்ளன இந்த கோவில் நாயக்கர் வம்சம் சோழநாட்டை ஆட்சி செய்தகாலத்தில் கட்டப்பட்டது.மன்னர் ஸ்ரீ அழகியமணவாள நாயக்கர்,மன்னார்குடியில் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோவில் கட்ட கும்பகோணத்திலிருந்து கற்களை கொண்டுசெல்லும்படி தன் மந்திரி நரசபூபாலனுக்கு கட்டளையிட்டார்.மந்திரி வெகுநாட்களாக பெருமாளுக்கு திருச்சேறையில் கோவில் கட்ட எண்ணம் கொண்டிருந்தார்.அதனால் மன்னார்குடிக்கு கற்களை கொண்டுசெல்லும் வழியில் திருச்சேறையிலும் அவ்வப்போது கற்களை இறக்கி கோவில் அமைக்கத்தொடங்கினார்இக்கோவிலை மந்திரி கட்டிவரும் விஷ்யம் ஒற்றன்மூலம் மன்னர் அறிந்து அங்கு வருவதற்குள் ஒரே இரவில் கோவிலும் அமைக்கப்பட்டு,அங்கு மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமிக்கும் ஒரு சன்னதியை மந்திரி அமைத்துவிட்டார் மன்னர் கோபத்துடன் திருச்சேறை வந்தவர்,பெருமாளின் அழகையும்,கம்பீரத்தையும் பார்த்து,ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி சன்னதியையும் பார்த்தவர் சாந்தமடைந்து,மந்திரியை மன்னித்து அருளினார்.மன்னருக்கு பெருமாள் ஸ்ரீராஜகோபாலனாகவே காட்சியளித்ததாக வரலாறு.

![]() |
திருச்சேறை பெருமாள் கோவில் புஷ்கரணி |
![]() |
ஸ்ரீ மஹால்க்ஷ்மி தாயார் |
கர்ப்பக்கிருகத்தில்
பெருமாள், ஹ்ருதயத்தில் ஸ்ரீதேவி,ஸ்ரீபூதேவியுடனும் முன்புறம் ஸ்ரீ சாரநாயகி, ஸ்ரீ நீலாதேவியருடனும்,வலப்புறத்தில் மார்க்கண்டேய ரிஷியுடனும் இடப்புறம்
காவேரித்தாய் மடியில் குழந்தையுடனும் காட்சியளிக்கின்றனர்.ஸ்ரீ சந்தானகோபாலனும்
உள்ளார்.ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு தனிச்சன்னிதி.ஸ்ரீ ராமர் திவ்யதரிசனமாக சீதா
லட்சுமணன், ஆழ்வார்களுடனும். காட்டில் 14 வருடம் தவமிருந்த கோலத்தில் காட்சி
அளிக்கின்றார்..கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ.தூரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. .
ஸ்ரீ மஹால்க்ஷ்மி சன்னிதியை
தரிசித்து,பின்னர் ஸ்ரீ பெருமாளை சேவித்து அர்ச்சனை செய்தோம்.ஸ்ரீ ஸ்ந்தான
கோபாலனையும் பூஜித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.இத்தலத்தில் தைப்பூசம்
தொடங்கி 10 நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.இந்த பெருமாளை தரிசனம்
செய்தால்,100 முறை காவேரியில் குளித்த பலன் உண்டு.பெருமாளுக்கு வஸ்திரம்
சாற்றி,திருமஞ்சனம் செய்வது இங்கு விசேஷமாக கருதப்படுகிறது.இக்கோவில் அருகிலேயே ஸ்ரீ
சார பரமேஸ்வரர் கோவில் உள்ள்து.எனவே அவரை தரிசனம் செய்ய சென்றோம்.
11. திருச்சேறை ஈஸ்வரன் கோவில்
ஈஸ்வரன்:- ஸ்ரீ சாரபரமேஸ்வரர் அம்பாள்:- ஸ்ரீ ஞானாம்பிகை. இங்கு சிவன் சுயம்பு
மூர்த்தியாய் அமைந்துள்ளார் மூலவருக்கு இடப்புறம் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது.இக்கோவிலில் மூன்று
துர்க்கைகள்.சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை.மூன்று
துர்க்கைகளும் ஒரே சன்னதியில் காட்சி அளிக்கின்றனர்.இங்கு நவகிரகத்தை அடுத்து
பைரவர் தனியாக.உள்ளார்.இவரின் இடது மேற்புற கையில் சூலத்துடன் கூடிய மணி
காணப்படுகிறது.இந்த பைரவரை அப்பர் தேவாரத்தில் பாடி உள்ளார்.உட்பிரகாரத்தில்,
வினாயகர்,நடராஜர், இட்பாரூடர் துர்க்கை சன்னதிகள் உள்ளன.மேற்கு பிரகாரத்தில் தல
வினாயகரும், மார்க்கண்டேயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால்
பூஜிக்கப்பட்டதுமான ஸ்ரீ ருணவிமோசன லிங்கேஸ்வரர் சன்னதி காணப்படுகிறது.அதையடுத்து
ஸ்ரீ பாலசுப்ரமணியர் உள்ளார். இங்கு ஸ்ரீ ருண விமோசனருக்கு திங்கள் கிழமைதோறும்
சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது கடன்நிவர்த்தி ஸ்தலம். 11 வாரங்கள்
தொடர்ந்து ஸ்ரீ ருணவிமோசனருக்கு பூஜை செய்து, அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி
வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.மனித பிறவிகளுக்கு உள்ள தெய்வ கடன்,ரிஷி
கடன்,பித்ருகடன் முதலியவற்றை போக்கும் சக்தி ஸ்ரீ ருணவிமோசனருக்கு உண்டு இங்குள்ள தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தமாகும்.இக்கோவிலை உடையார் கோவில் என்றும் வழங்குவர்.ஸ்ரீ ருண விமோசனரை பூஜிக்கும்போது, தரித்திஈ தஹன ஸ்தோத்திரம் சொல்வர்.இந்த ஸ்லோகத்தை கோவிலில் எழுதி வைத்துள்ளார்கள்.
![]() |
ஸ்ரீ சார பரமேஸ்வரர் கோவில் |
இங்கு மாசிமாதம் 13,14,15 தேதிகளில்
மூலவர் மீதும் அம்பாள் பாதத்தின் மீதும் சூரியனின் கிரணங்கள் படுவது மிகவும்
விசேஷம். இங்கு தல விருட்சம் மாவிலங்கை.இந்த மரத்தில் வருடத்தில் 4 மாதம் இலைகள்
காணப்படும். பின்னர் அடுத்த 4 மாதம் வெண்மை நிற பூக்கள் பூத்துக்குலுங்கும்.
அடுத்த 4மாதம் வெறும் மரம்தான் இருக்கும்.இப்படிப்பட்ட அதிசயமான விருட்சம் இந்த
தலத்தில் விசேஷமாக கருதப்படுகிறது.பஞ்ச சார க்ஷேத்ரம் அருகில் உள்ளதால்
இக்கோவிலுக்கும் ஸ்ரீசாரபரமேஸ்வரர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று
கூறுகின்றனர்.இங்கு மூலவருக்கு ஸ்ரீ செந்நெறியப்பர் என்ற பெயரும் உண்டு. இங்கு
ஐப்பசி மாத அன்னாபிஷேகம், ஆருத்ரா, சிவராத்திரி முதலியன விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. நாங்களுமமூலவருக்கும்,அம்பாளுக்கும் அர்ச்சனை
செய்தோம்.ஸ்ரீ
ருணவிமோசனரையும் வேண்டிக்கொண்டு
நெய்விளக்கு ஏற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
எங்களது அடுத்த ஊர் நாச்சியார்
கோவில்.
No comments:
Post a Comment